2025ஆம் ஆண்டு 12 ராசிகளும் வழிபட வேண்டிய ஆறுபடை முருகன் ஆலயம்
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த 2025ஆம் ஆண்டு சிறப்பாக அமைய பழனி மலை முருகனை தரிசனம் செய்வது சிறந்த பலன் கொடுக்கும். பால தண்டாயுதபாணியை ஒரு முறை தரிசித்து வர வாழ்க்கையில் மிக பெரிய ஏற்றத்தை சந்திக்கலாம்.
நீங்கள் பழனி மலை முருகனை தரிசனம் செய்யவேண்டும் என்று எண்ணினால் ஞாயிற்றுகிழமை அல்லது செவ்வாய் கிழமையில் சென்று தரிசனம் செய்வது உகந்த பலன் கொடுக்கும்.
ரிஷபம் மற்றும் துலாம்
ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர் இந்த 2025ஆம் ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய திருத்தணி முருகனை மனதார வழிபாடு செய்வது வாழ்க்கையில் உள்ள துன்பத்தை போக்கும்.
திருத்தணி முருகனையும், வள்ளியம்மையையும் மனதார உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்கள் அடியோடு விலகவேண்டும் என்று வேண்டுதல் வைக்க நிச்சயம் திருத்தணி முருகன் அருளால் நல்ல மாற்றம் உண்டாகும். இங்கு சென்று வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை செல்வது நல்ல பலன் கொடுக்கும்.
மிதுனம் மற்றும் கன்னி:
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் பழமுதிர்சோலை முருகனை வழிபாடு செய்வது இவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் எல்லாம் விலகும். வள்ளி தெய்வானையோடு முருகர் பழமுதிர்ச்சோலையில் காட்சி தருகின்றார். இங்கு சென்று வழிபாடு செய்து அவர்கள் சொந்த வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் எல்லாம் முருகன் அருளால் விலகு விடும்.
கடகம் மற்றும் சிம்மம்:
கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்கள் சுவாமிமலை முருகனை சென்று தரிசனம் செய்ய வேண்டும். இவர்கள் இங்கு சென்று தரிசனம் செய்து வர இவர்கள் தொழில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் மொத்தமாக விலகிவிடும்.
மகரம் மற்றும் கும்பம்:
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் இந்த 2025 ஆம் ஆண்டு கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய முருகன் ஆலயம் திருப்பரங்குன்றம். பல நாட்களாக திருமண வரன் தேடும் மகரம் மற்றும் கும்ப ராசியினர் ஒருமுறை இங்கு சென்று வழிபாடு செய்ய விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையும். அதோடு அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
தனுசு மற்றும் மீனம்:
தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டு சிறப்பாக அமைய திருச்செந்தூர் முருகனை நினைத்து வழிபாடு செய்வதும் அங்கு சென்று அவரை தரிசனம் செய்வதும் நல்ல பலன் கொடுக்கும். வியாழக்கிழமை மற்றும் வளர்பிறை சஷ்டி தினம் அன்று வழிபாடு செய்வது இவர்களுக்கு முருகனின் அருளால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |