அட்சய திருதியை 2025: செல்வம் பெருக 12 ராசிகளும் வாங்கவேண்டிய அதிர்ஷ்ட பொருட்கள்
அட்சய திருதியை இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை ஆகும். இந்த நாளில் எந்த காரியங்கள் தொடங்கினாலும் அதில் வெற்றியும் அதிர்ஷ்டமும் உண்டாகும்.
இந்த 2025 ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அப்படியாக, 12 ராசிகளும் வீட்டில் செல்வம் பெருக வாங்க வேண்டிய முக்கியமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று வெள்ளி அல்லது தங்க நாணயம் வாங்கலாம். அதோடு இவர்கள் சிவப்பு நிற ஆடைகள், பருப்பு வகைகள், வெல்லம் போன்றவை தானம் செய்தால் சிறந்த பலன் உண்டாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியின் சிலை, மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை வாங்கலாம். மேலும், இவர்கள் வெள்ளை இனிப்புகள், பால், அரிசி அல்லது கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு படிப்பு உதவி செய்யலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று படிப்பு தொடர்பான விஷயங்களை வாங்கலாம். அதே போல் மாணவர்களுக்கு புத்தகம் தானம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று பூஜை அறைக்கு தேவையான பொருட்கள் மற்றும் சமையல் அறை பொருட்களை வாங்கலாம். அதே போல், பால் சார்ந்த இனிப்புகள் வெள்ளை உடைகளை தானம் செய்யலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று தங்க நகைகள் மற்றும் ஆடைகள் வாங்கலாம். இவர்கள் இன்றைய தினம் வெல்லம், கோதுமை அல்லது குழந்தைகளின் படிப்பு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவது நற்பலனை கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் மரம் செடிகள் வாங்குவது இவர்களுக்கு சிறந்த பலன் கொடுக்கும். மேலும், இவர்கள் பச்சை நிற ஆடைகளை தானமாக வழங்கலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வாசனை திரவியங்கள் வாங்கலாம். இவர்கள் ஏழை பெண்களின் திருமண வாழ்க்கைக்கு உதவி செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் மூதாதையர் நிலம் தொடர்புடைய சொத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் தானமாக சிவப்பு பயிறு குங்குமப்பூ போன்றவற்றை வழங்கலாம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் ருத்ராட்ச மணிகள், புத்தங்கள் மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களை வாங்கலாம். இவர்கள் முதியோர் இல்லத்திற்கு முடிந்த உதவுகள் செய்வது நன்மை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் தொழில் தொடர்பாக புதிய முதலீடுகளை செய்யலாம். இவர்கள் தானமாக போர்வைகள், கருப்பு எள் வழங்கலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் வெள்ளி நகைகள் மற்றும் ரத்தின கற்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினால் சிறந்த பலன் பெறலாம்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் அட்சய திருதியை நாளில் ஆன்மீக தொடர்பான பொருள்களை வாங்குவது வெற்றியைத் தரும். இவர்கள் தானமாக கடவுள் சிலை வாங்குவது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |