எந்த ராசிக்காரர்கள் எந்த திதியன்று கவனமாக இருக்க வேண்டும்
நம்முடைய தமிழ் பஞ்சாங்கத்தில் வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.
அப்படியாக நம்முடைய வாழ்க்கையில் நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகள் பார்த்தே செய்யப்படுகிறது.
ஆனால் இந்த திதி ஒவ்வொரு ராசிகள் பொறுத்தே அமைகிறது. அப்படியாக, 12 ராசிகளும் சில திதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்ல படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
மேஷம் - சஷ்டி
ரிஷபம் - சதுர்த்தி, திரயோதசி
மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
கடகம் - சப்தமி
சிம்மம் - திருதியை, சஷ்டிநவமி, தசமி, திரயோதசி
கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி
துலாம் - பிரதமை, துவாதசி
விருச்சகம் - நவமி, தசமி
தனுசு - துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி
மகரம் - பிரதமை, திருதியை, துவாதசி
கும்பம் - சதுர்த்தி
மீனம் - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி
இந்த திதிகளில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். அதே சமயம் சில முக்கியமான வேலைகளை செய்யும் பொழுது அதிகம் யோசித்து செயல்பட அவர்கள் நன்மை அடைவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |