பகவத் கீதை உணர்த்தும் வாழ்க்கையின் 18 உண்மைகள்
இந்து மதத்தில் பகவத் கீதை என்பது அனைவரையும் வழிநடத்தும் ஆசிரியர் என்றே சொல்லலாம். நாம் பூமியில் வாழும் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும், சந்திக்கும் இன்பம் துன்பங்களை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பகவத் கீதை நமக்கு எடுத்துரைக்கிறது.
அப்படியாக, பகவத் கீதையில் வாழ்க்கையை உணர்த்தும் 18 உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கிறது அதை பற்றி பார்ப்போம். காமம்: காமம் அதிக அளவில் நம்மை ஆட்கொள்ளும் பொழுது அழிவை தவறான செயலால் அழிவை கொடுக்கிறது.
குரோதம்: கோபம் அவனை மட்டும் அல்லாது அவன் சுற்றி உள்ளவர்களையும் கெடுத்து விடும்.
லோபம்: பேராசை நிம்மதியை கெடுக்கும். பேராசை நம்மிடம் இருப்பதையும் அழித்து விடும்.
மதம்: மதம் பிடித்த யானையை யாரும் விரும்புவதில்லை. அதே போல் தான் மனிதனுக்கு வெறி பிடித்தால் அவனை யாரும் நெருங்க விரும்பமாட்டார்கள். இறைவனும் விலகியே நிற்பார்.
மாத்ஸர்யம்: பொறாமை எண்ணம் எதிரிகளை விட மோசமானது. அந்த எண்ணமே அவனை கொன்று விடும்.
டம்பம் (வீண் பெருமை): நம்மிடம் ஒட்டாத விஷயம் எதுவும் நம்மிடம் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற எண்ணம் வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்காது. அது சோகத்தில் தான் முடியும்.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: தான் என்ற நிலையில் கர்மம் செய்தல் கூடாது.
தாமஸம்: சுயநலம் வாழ்வை கெடுத்துவிடும்.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நாமமும் வருந்தாமல், பிறரும் வறுத்தம் கொள்ளாத வாழ்வை வாழ வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மை என்று தெரிந்தும் அதை ஏற்க மறுத்து கண்களை மூடி கொள்வது.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: இறைவன் பெருமைகளை கேட்டு ஆனந்த கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
நாமும் வாழ்க்கையில் இந்த 18 விஷயங்களை சரியாக கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் இறைவன் அருளால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, வாழும் நாட்களில் இறைவனை நாம் மனதார உணரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |