2025 ஆவணி மாதம் சிறப்பாக அமைய 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

By Sakthi Raj Aug 16, 2025 07:07 AM GMT
Report

மேஷம்:

செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மற்றும் செந்நிற துணி சமர்ப்பித்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகும்.

ரிஷபம்:

இவர்கள் வாழ்க்கையில் அமைதியான சூழல் உருவாக வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை புடவை, வெள்ளைப் பூ அர்ப்பணித்து வழிபாடு செய்யலாம்.

மிதுனம்:

மன தெளிவு பெற புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு துளசி, பச்சைப் பயிறு நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

கடகம்:

இவர்களின் கஷ்ட காலம் விலக திங்கள்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று பால் அரிசி பாயாசம் படைத்து வழிபாடு செய்யலாம்.

சிம்மம்:

இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானுக்கு சிவப்பு அரளி மலர் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி:

இவர்கள் புதன்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆலயம் சென்று பச்சை வாசனை தூபம் ஏற்று வழிபாடு செய்தால் வாழ்க்கையில் சந்தித்து வரும் சங்கடங்கள் விலகும்.

துலாம்:

இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயார் முன்பு பஞ்சு விளக்கு ஏற்றி சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

2025 கிருஷ்ண ஜெயந்தி: இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்

2025 கிருஷ்ண ஜெயந்தி: இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்

விருச்சிகம்:

நினைத்தது நடக்க இவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு வெற்றிலை பாக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும்.

தனுசு:

இவர்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் அமையவும் வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் மலர், கடலைப்பருப்பு பொங்கல் அர்ப்பணித்து வழிபாடு செய்ய வேண்டும்.

மகரம்:

இவர்கள் வாழ்க்கையில் சந்தித்து வரும் இருள் விலக சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர் முன் கருப்பு எள் எண்ணெய் தீபம் ஏற்று வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும.

கும்பம்:

இவர்கள் சனிக்கிழமை அன்று ஏழை மக்களுக்கு துணி தானம் வழங்குவதால் நல்ல மாற்றம் பெறலாம்.

மீனம்:

இவர்கள் வியாழக்கிழமை அன்று விஷ்ணு பகவானுக்கு மஞ்சள் மலர் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் ஞானமும் தெளிவும் பிறக்கும் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US