2025 கிருஷ்ண ஜெயந்தி: இன்று கிருஷ்ணரை வழிபாடு செய்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்
விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரமான கிருஷ்ண பகவான் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். அப்படியாக கிருஷ்ண பகவான் பூமியில் உதித்த தினத்தையே நாம் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி 2025 ஆண்டு ஆகஸ்ட் 16 கொண்டாடப்படுகிறது. மேலும், அஷ்டமி திதி ஆகஸ்ட் 16ம் தேதி முழுவதுமாக உள்ளது. அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வதின் வழியாக கிடைக்கும் பலன்களும் நன்மைகளும் பற்றியும் பார்க்கலாம்.
1. கிருஷ்ண பகவானை சரண் அடையும் பொழுது நமக்கு அறிவு, ஞானம் மன தெளிவு கிடைக்கிறது. அதோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிடைப்பதோடு சமுதாயத்தில் நற்பெயர் கிடைக்கும்.
2. திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் அவர்களுக்கு விரைவில் கிருஷ்ணர் அருளால் குழந்தை வரம் கிடைக்கும்.
3. கிருஷ்ண ஜெயந்தியில் நாம் மனதார கிருஷ்ணரை நினைத்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு புண்ணியம் சேருகின்றது. ஸ்ரீ ஹரியை சரண் அடையும் பாக்கியம் பெறுவதே நம் வாழ்க்கையில் செய்த மிக பெரிய புண்ணியம் ஆகும். இந்த நாளில் நாம் கிருஷ்ணரை வழிபாடு செய்யும் பொழுது நம் மனதில் உள்ள அழுக்குகள் விலகி, பிறவி பலன் பெறலாம்.
4. மேலும், அஷ்ட திதியில் பல நன்மைகள் இருக்கின்றது. அதாவது இந்த நாளில் நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய சாபம் விலகுகிறது. மனம் சாந்தம் அடைகின்றது. இந்த நாளில் விஷ்னு சஹஸ்ரநாமம், கிருஷ்ணரின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது நமக்கு மிக பெரிய வெற்றியை பெற்றுக்கொடுக்கிறது.
5. கிருஷ்ணரை சரண் அடைந்தால் நாம் தர்மத்தை நோக்கிய பயணத்தை தொடருவோம். அவர் அருளால் அதர்மம் அழிந்து தர்மம் வெல்லும். கிருஷ்ணர் நம்முடன் எல்லா காலகட்டங்களில் இருந்து நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுப்பார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







