நாளை(12-05-2025) சித்ரா பௌர்ணமி அன்று அவசியம் செய்யவேண்டிய வழிபாடு
இந்துக்கள் பண்டிகையில் மிகவும் முக்கியமான பண்டிகை என்று சொன்னால் அதில் சித்ரா பௌர்ணமியும் ஒன்று. இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி நாளை 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த பண்டிகை சித்ரகுப்தருடன் தொடர்புடைய பண்டிகை ஆகும்.
இவர் தான் ஒரு மனிதனின் கணக்குகளை சேகரித்து அவர் அவர் செய்த பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப சொர்க்கம், நரகம் செல்ல தீர்மானிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக, கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு சூழ்நிலையால் தவறு அல்லது பாவங்கள் செய்து இருந்தால் அவர்கள் அதற்கான பரிகாரத்தை இந்த சித்ரா பௌர்ணமியில் செய்யலாம்.
அதே போல் சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று வழிபாடு செய்வதால் நம்முடைய பாவங்கள் எல்லாம் கரைந்து வாழ்வு சிறப்பதாக சொல்கிறார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல ஊர்களில் இருந்து பக்தர்கள் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல வருகிறார்கள்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் நாம் அதிகாலை எழுந்து குளித்து பூஜை செய்து விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும். மேலும் நம்முடைய ஆன்மீக பயணத்திற்கு இந்த சித்ரா பௌர்ணமி நாள் மிக மிக விசேஷமாக பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய தினம் தியானம் செய்தல், இறைவனையே மனதில் நிறுத்தி நமக்கான வேண்டுதல் வைக்க இறைவன் அருளால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். சித்ரா பௌர்ணமி அன்று நாம் அசைவம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
அதே போல் தேவை இல்லாமல் கெட்ட வார்த்தை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். அதோடு அன்றைய தினம் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்த முழு பலனை பெற ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது சித்ரகுப்தர் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்குவதாக சொல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |