குரு மங்கள யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் மகர ராசியினர்
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அப்படியாக, அன்றைய நாளில் பல்வேறு கிரக நிகழ்வுகளும் மாற்றங்களும் நடக்க உள்ளது. அந்த வகையில் நடக்கின்ற கிரக மாற்றத்தால் மகர ராசியினருக்கு எவ்வாறு அமைய போகிறது என்று பார்ப்போம்.
மகரம்:
மகர ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் நவம்பர் 28ஆம் தேதி வக்ர நிலைக்கு செல்கிறார். பிறகு குரு பகவான் 7ஆம் இடத்தில் உச்சம் அடைகிறார். மகர ராசிக்கு குரு பகவான் உச்சம் பெரும் பொழுது வெளிநாடு செல்லும் யோகம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவை உண்டாகும், சிலருக்கு தொழில் ரீதியாக புதிய கூட்டாளிகள் இணையவும் வாய்ப்புகள் உள்ளது.
குடும்பத்தில் யாருக்காவது விரிசல் ஏற்பட்டு இருந்தால் அவை விலகும். மேலும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கட்டாயம் மகர ராசியினருக்கு தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் கடன் பிரச்சனையும் விலகும். அரசு ரீதியாக இவர்களுக்கு நல்ல அனுகூலம் இருக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய இடம்:
பிரிந்து சென்ற காதலர்கள் மீண்டும் இணைந்து வந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். விளையாட்டு துறையில் கட்டாயம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







