48 நாட்களில் ராசியை மாற்றும் குரு- அதிரடி ஜாக்பாட் எந்த ராசிகளுக்கு?
நவக்கிரகங்களில் குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவார். ஏப்ரல் 2025 குரு மிதுன ராசியில் பெயர்ச்சி அடைந்தார். குரு பகவான் 12 ஆண்டுகள் பெயர்ச்சி ஆவார். தற்பொழுது குரு தனது உச்ச ராசியான கடக ராசியில் பெயர்ச்சி ஆவது மிகச் சிறந்த பலனைன் கொடுக்கப்போகிறது.
அதாவது நவம்பர் 11 ஆம் தேதி குரு கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். இந்த ராஜயோகம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தையும் வாய்ப்புகளையும் கொடுக்கபோகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜ யோகம் மிகப்பெரிய நன்மைகளை கொடுக்க போகிறது. இவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உயரப் போகிறார்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்கப் போகிறது. வேலையில் ஒரு சிலருக்கு நல்ல முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு குரு பெயர்ச்சி வாழ்க்கையில் ஒரு தெளிவை கொடுக்கப் போகிறது. இவர்கள் பணத்தை சேமிப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் ரீதியாக முடங்கிக் கிடந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இவர்களுக்கு சாதகமாக அமையும்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் நல்ல சாதகமான பலன்களை கொடுக்க உள்ளது. காதல் வாழ்க்கை ஒரு சிலருக்கு இனிமையாக அமையும். திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை கிடைக்கப் போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







