2025 கந்த சஷ்டி எப்பொழுது? விரதம் எப்பொழுது தொடங்க வேண்டும்?
முருகப்பெருமானின் விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக கந்த சஷ்டி விரதம் இருக்கிறது. மேலும் முருகப்பெருமானை முறையாக வழிபட்டு அவரை துதித்து வழிபாடு செய்பவருக்கு முருகனின் அருளால் வாழ்க்கை வண்ணமாக மாறும்.
மேலும் கார்த்திகை விரதம் மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி விரதம் ஆகிய நாட்களில் பக்தர்கள் முருகப்பெருமானை மனம் உருகி நினைத்து வழிபாடு செய்து விரதம் இருக்கும் பக்தர்களின் குறைகளை கேட்டு அதை நிறைகளாக மாற்றி கொடுப்பார்.
மேலும், முருகப்பெருமானுடைய விரதங்களில் பல விரதங்கள் நமக்கு பல நன்மைகளை கொடுத்தாலும் அவருக்குரிய மகா கந்த சஷ்டி விரதம் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக சொல்லப்படுகிறது. இந்த விரதமானது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சஷ்டி வரை 48 நாட்கள் இந்த விரதத்தை மக்கள் கடைபிடிப்பார்கள்.
அப்படியாக இந்த ஆண்டு மகா கந்த சஷ்டி விரதம் எப்பொழுது வருகிறது? அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாடுகளை பற்றி பார்ப்போம். 2025 ஆம் ஆண்டிற்கான மகா கந்தசஷ்டி விரதம் வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதோடு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதியில் நடைபெறுகிறது.
அந்த நாளுக்கு முன்னதாக முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படியாக 48 நாட்கள் அவர்கள் விரதம் இருப்பதற்காக செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 27ஆம் தேதி வரை விரதம் இருப்பார்கள்.
இந்த நாட்களில் பலரும் மாலை அணிந்து முருகப்பெருமானைமனமுருகி மனதில் நினைத்துக் கொண்டு அவர்களுடைய காரியம் வெற்றி பெற பக்தியில் முழு ஈடுபாட்டை செலுத்துவார்கள்.
ஆக முருகப்பெருமானுடைய மகா கந்த சஷ்டி விரதம் வர இருப்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களுடைய குறைகள் தீர்ந்து வாழ்க்கையில் வளம் பெற முருகப்பெருமானை சரணடைந்து அவரின் அருளைப் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







