தீராத கடன் பிரச்சனை தீர பெண்கள் சொல்ல வேண்டிய மகாலட்சுமி காயத்ரி மந்திரம்
உலகை அளக்கும் பெருமாளின் மார்பில் குடிக் கொண்டு இருப்பவள் மகாலட்சுமி தாயார். அவள்தான் செல்வத்திற்கு அதிபதியாக விளங்குகிறாள். மேலும் ஒருவர் மகாலட்சுமி வழிபாடு செய்ய தொடங்கிய நாள் முதல் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் படிப்படியாக அதிர்ஷ்டத்தை பெற தொடங்குவார்கள்.
அதோடு எவர் ஒருவர் வாழ்க்கையில் மகாலட்சுமி தாயார் பார்வை படுகிறதோ அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய இடத்தை அடைந்து விடுவார்கள். அப்படியாக பெண்கள் தங்கள் குடும்பங்களில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் விலகவும், குடும்பங்களில் தீராத கடன் சுமைகளால் அவர்கள் துன்பப்படும் நிலை மாறவும் அவர்கள் தினமும் வீடுகளில் விளக்கேற்றி மகாலட்சுமி தாயார் முன் அமர்ந்து சொல்ல வேண்டும் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை பற்றி பார்ப்போம்.
மந்திரங்கள்:
ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி | தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத்
ஓம் விஷ்ணு பத்ன்யைச வித்மஹே ஸ்ரீ பூசகைச் தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத்
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத்
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே விஷ்ணுபந்தாய ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் பூ சக்யைச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் அம்ருத வாசினி வித்மஹே பத்மலோசனி தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் மஹா லக்ஷமைச வித்மஹே மஹா ஸ்ரீயை ச தீமஹி தந்நோ ஸ்ரீ ப்ரசோதயாத்
ஓம் மஹா சக்த்யை ச வித்மஹே நாராயண்யை ச தீமஹி தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
இந்த மந்திரங்களை நாம் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் நம் குடும்பத்தில் சந்தோசம் பெருகும், வறுமை விலகும், கடன் சுமை குறையும், ஒற்றுமை அதிகரிக்கும், சுபகாரியங்களில் சந்திக்கக்கூடிய தடைகள் விலகும் அதோடு மஹாவிஷ்ணுவின் அருள் பரிபூர்ணமாக நம்மை வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







