இறைவனை நெருங்க இந்த 3 விஷயங்களை கடைப்பிடியுங்கள்
மனிதர்கள் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. நிறைய தேடல்கள் நிறைந்தது. அதில் ஆன்மீகம் என்பது மனிதனை மேம்படுத்தக்கூடியது, மனிதனை ஒழுக்க நெறிகளுடன் வாழ ஒரு வழிகாட்டியாக அமைகிறது. மேலும், மனிதன் இறைவனை நெருங்க நெருங்க அவன் தூய்மை அடைகிறான்.
அவன் அற்புதமான வாழ்க்கை பாடத்தை கற்று தெளிந்து விடுகிறான். அப்படியாக தன் வாழ்க்கையில் இந்த மூன்று சில விஷயங்களை பின்பற்றினால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் பெறலாம் என்கிறார்கள். அதை பற்றி பாப்போம்.
1. மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு காலகட்டத்தில் புண்ணிய காரியங்களை செய்திருப்போம். அதேபோல் நம்மை அறியாமல் ஏதேனும் பாவ செயல்களையும் செய்திருப்போம். அப்படியாக ஒருவர் தான் செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி பிறரிடம் பகிர்ந்து விடலாம். அவ்வாறு சொல்லும் பொழுது அந்த பாவம் குறைகிறது. ஆனால் ஒரு பொழுதும் நாம் செய்த புண்ணியத்தை பிறரிடம் பகிரக் கூடாது அவ்வாறு சொல்லும் பொழுது புண்ணியம் குறைகிறது.
2. ஒருவர் வீரத்தோடும் அறத்தோடும் சிறிது காலம் வாழ்ந்து விட்டால் கூட அவனுக்கு பெருமை சேர்கிறது. ஆனால் வீரமும் புகழும் நல்ல அறமும் இல்லாமல் அவன் நெடுங்காலம் வாழ்ந்தாலும் அவன் பயனற்றவனாக இருக்கிறான்.
3. இறை வழிபாடு என்பது இறைவனுடைய திருநாமங்களையும் மந்திரங்களையும் சொல்வது மட்டுமே அல்ல. சக உயிர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடப்பது ஆகும். இறைவன் மனதில் குடிகொள்ள வேண்டும் என்றால் அவன் மனதில் கருணை நிறைந்திருக்க வேண்டும். கருணை படைத்த இதயத்தில் இறைவன் நீங்காது இடம் பிடித்திருக்கிறான். ஆதலால் துன்புறுகின்ற உயிர்களுக்கு கருணை செய்து பழக வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது நாம் முழு மனிதனாக நல்ல மனிதனாக உருவாகுகின்றோம். அதோடு இறைவனின் முழு அருளும் நமக்கு கிடைத்து வாழ்க்கையில் வளம் பெறுகின்றோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







