இலவசமாக முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்ய ஒரு அற்புத வாய்ப்பு
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உலகம் எங்கிலும் பக்தர்கள் ஏராளம். மேலும், முருகப்பெருமானுக்கு எத்தனையோ சிறப்பு வாய்ந்த கோயில்கள் இருந்தாலும், முருகப்பெருமானுக்கு உரிய ஆறுபடை வீடுகள் தனி விசேஷம் கொண்டது.
அப்படியாக முருக பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று தரிசனம் செய்து வர வேண்டும் என்று ஆசை வைத்திருப்பார்கள். அந்த வகையில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளை இலவசமாக தரிசனம் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஒரு அற்புதமான ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களை இலவசமாக காசி ராமேஸ்வரம் புனித பயணம், முருகனின் அறுபடை வீடுகளின் ஆன்மீக பயணமும் அழைத்து செல்வார்கள்.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு முருகப்பெருமானின் திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து சுமார் 2000 பக்தர்களை அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்கள்.
இந்த இலவச பயணத்தை மேற்கொள்ள பக்தர்களுக்கு வயது 60 முதல் 70 வரை இருக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு பயணத்தின் பொது தேவையான பொருட்களில் இருந்து தங்கும் அறை வரை அனைத்தும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
இந்த ஆன்மீக பயணத்தில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 1800 425 1757 என்கின்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்திகொண்டு இனிமையான ஆன்மீக பயணம் மேற்கொண்டு முருகன் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







