நாளை உத்பன்ன ஏகாதசி 2025: அதிர்ஷ்டம் உண்டாக நாளை இந்த 4 பரிகாரங்கள் செய்யுங்கள்

By Sakthi Raj Nov 14, 2025 09:09 AM GMT
Report

  நம்முடைய இந்து மதத்தில் விரதங்களில் மிக முக்கியமான விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது. மேலும், ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசி விரதங்கள் வருகிறது. பக்தர்கள் இந்த நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள் விலகி அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதோடு ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர்களும் உண்டு. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசியை உத்பன்ன ஏகாதசி என்று சொல்வார்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உத்பன்ன ஏகாதசி நவம்பர், 15 ஆம் தேதி அன்று வருகிறது. இந்த நாளில் தான் ஏகாதசி தேவி அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்படுகிறது.

கருட புராணம்: வாழ்க்கையில் தவறியும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

கருட புராணம்: வாழ்க்கையில் தவறியும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

ஆதலால் இந்த நாளில் பக்தர்கள் கட்டாயம் பெருமாளையும் ஏகாதசி தேவியையும் அதோடு துளசி தேவியையும் மனதார வழிபாடு செய்வது என்பது அவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த புண்ணியத்தை கொடுக்கும். அப்படியாக நாளை வரக்கூடிய உத்பன்ன ஏகாதசியில் நாம் துளசி செடிக்கு செய்ய வேண்டிய முக்கியமான 4 பரிகாரங்களை பற்றி பார்ப்போம். அதை நாம் வீடுகளில் செய்யும் பொழுது நம் வீடுகளில் அதிர்ஷ்டம் உண்டாகி செல்வ வளம் பெருகும் என்கிறார்கள்.

நாளை உத்பன்ன ஏகாதசி 2025: அதிர்ஷ்டம் உண்டாக நாளை இந்த 4 பரிகாரங்கள் செய்யுங்கள் | 2025 Nov Utpanna Ekadashi Worship And Remedies

பரிகாரங்கள்:

1.ஏகாதசி திதி என்று துளசி செடியின் வேருக்கு சிறிதளவு பால் ஊற்றி வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாகும். அவ்வாறு துளசி செடிக்கு பால் ஊற்றிய பிறகு துளசி செடிக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ" என்ற மந்திரத்தை மனதார 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு நாம் முழு நம்பிக்கையோடு செய்யும் பொழுது துளசி தேவியின் அருளும் பெருமாளின் அருளும் அன்றைய நாளில் நமக்கு கிடைத்து நம் வாழ்க்கையில் ஒரு நல்ல பாதை பிறக்கும்.

2. அதோடு நாளைய தினம் துளசி தேவியை ஏழு முறை சுற்றி வந்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு சுற்றி வரும் பொழுது "ஜெய் ஸ்ரீஹரி"  என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே சுத்தி வருவது அவசியமாகும்.

நாளை உத்பன்ன ஏகாதசி 2025: அதிர்ஷ்டம் உண்டாக நாளை இந்த 4 பரிகாரங்கள் செய்யுங்கள் | 2025 Nov Utpanna Ekadashi Worship And Remedies

யாரெல்லாம் காவி நிறத்தில் ஆடை அணியலாம்?அணியக்கூடாது

யாரெல்லாம் காவி நிறத்தில் ஆடை அணியலாம்?அணியக்கூடாது

3. நாளைய தினம் துளசி தேவிக்கு வளையல், குங்குமம், கண்ணாடி, சிவப்பு நிற வஸ்திரம் என 16 வகையான மங்கள பொருட்களை சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மகாலட்சுமியின் அருள் நம் குடும்பத்திற்கு கிடைத்து செல்வ வளம் பெருகும்.

4. வீடுகளில் கடன் தொல்லைகளால் நீண்ட நாட்கள் சிரமப்படுபவர்கள் நாளை ஏகாதசி நாளில் சில துளசி இலைகளை பறித்து அதை ஒரு சிவப்பு நிற துணியில் சுற்றி பணம் வைக்கும் இடங்களில் வைத்துவிட வேண்டும். இவை நம் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய சிக்கலை போக்கி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US