இந்த 3 ராசிகாரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபட போகிறார்களாம்
நவகிரகங்களில் சனி பகவான் நீதிமானாக இருப்பவர். இவர் ஒரு மனிதன் காலத்தினால் செய்யக்கூடிய நன்மை தீமைகளுக்கு தகுந்தவாறு அவர்களுக்கு பலன்களை வழங்கி வருபவர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சியானார். இந்த மீன ராசி பெயர்ச்சி ஜோதிடத்தில் ஒரு சில ராசிக்கு சனி பகவானுடைய சில தாக்குதலால் பல தீமைகளும் தோஷங்களும் ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகி இருப்பார்கள்.
அப்படியாக இந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் நுழைந்து மீன ராசியில் சனியை பார்வையிடுகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு சனியின் பார்வை விடுபட்டு அவர்களுக்குரிய தீமை குறைந்து நன்மை நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினருக்கு இந்த மாற்றமானது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மை இல்லை என்றாலும் அவர்கள் வாழ்க்கையில் இத்தனை நாள் சந்தித்து வருகின்ற குழப்பங்களும் இத்தனை நாள் அவர்கள் தொழில் ரீதியாக தேடிக் கொண்டிருந்த மாற்றமும் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நடக்கும். அதாவது கடந்த சில நாட்களாக மேஷ ராசியினர் சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த குழப்பத்திற்கான விடை இந்த குறுகிய காலகட்டத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.
தனுசு:
தனுசு ராசியினருக்கு குரு பகவானுடைய இந்த பெயர்ச்சியானது சனிபகவான் உடைய தாக்கத்தை குறைத்து அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பயணத்தை மிகத் தெளிவாகவும் தைரியமாகவும் எடுத்து வைக்கக்கூடிய நிலையை உருவாக்கும். அதாவது இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் உருவாகும். அதே சமயம் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் இவர்கள் செய்யும் பொழுது அவையெல்லாம் வெற்றிகையும் அவர்களுக்கு சாதகமான நிலையும் வழங்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு நிதானம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது சனிபகவானின் தாக்கத்தை மிக முற்றிலுமாக குறைத்து அவர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை விலக்கப் போகிறது. மீன ராசியினருக்கு எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களை தாண்டி ஒரு நேர்மறை எண்ணமானது அவர்கள் வாழ்க்கையில் முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு பாதையை காட்டும். எதிரிகளை சமாளிக்க கூடிய தைரியம் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பிறக்கும். பணப் பிரச்சனை முற்றிலுமாக குறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







