இந்த ராசிகளுக்கு எப்பொழுதும் கிருஷ்ணரின் அருள் இருக்குமாம்.. உங்கள் ராசி உள்ளதா?

By Sakthi Raj Mar 13, 2026 11:30 AM GMT
Report

 ஜோதிடத்தில் குறிப்பிட்ட சில ராசிகள் இயல்பாகவே இறைவனின் முழு அருளை பெற்று இருப்பார்கள்.

இவர்களுக்கு தலைக்கு மேல் பிரச்சனை வந்தாலும் எப்பொழுதும் இறைவனால் காப்பாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் கிருஷ்ண பகவானுடைய அருளை பெற்ற சில ராசியினர் இருக்கிறார்கள். கிருஷ்ண பகவானின் அருள் எப்பொழுதும் இவர்களுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

இந்த ராசிகளுக்கு எப்பொழுதும் கிருஷ்ணரின் அருள் இருக்குமாம்.. உங்கள் ராசி உள்ளதா? | 3 Zodiac Will Always Have Lord Krishna Blessings

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கெல்லாம் பணமழை தானாம்

சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கெல்லாம் பணமழை தானாம்

ரிஷபம்:

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அந்த வகையில் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கிருஷ்ண பகவான் உடைய அருளை பெற்றிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் கிருஷ்ண பகவானை தொடர்ந்து வழிபாடு செய்வதனால் இவர்கள் வாழ்க்கையை சந்திக்கின்ற தடைகள் விலகி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண பகவானின் அருள் எப்பொழுதும் இவர்களுக்கு ஒரு வழி துணையாகவே இருக்கிறது. இவர்கள் அவ்வப்போது கிருஷ்ண பகவானின் ஆலயம் சென்று வழிபாடு செய்யும் போது அவர்கள் மனரீதியாக சந்திக்கின்ற குழப்பங்கள் விலகி ஒரு நிலையான மற்றும் தெளிவான தன்மையை பெறுகிறார்கள். மேலும் இவர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதால் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்யும்பொழுது மனவலிமை பிறக்கிறது.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி: இந்த வருடம் என்ன நடக்கும்?

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி: இந்த வருடம் என்ன நடக்கும்?

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் வழிபாடு செய்யும்பொழுது இவர்களுக்கு தைரியமும் எதையும் சாதிக்கக்கூடிய வலிமையும் பிறக்கிறது. அரசியல் ரீதியாக மற்றும் தொழில் ரீதியாக இவர்களுக்கு எதிரிகள் இருக்கும் பொழுது இவர்கள் கிருஷ்ண பகவானை சரணடைந்து பகவத்கீதையை படிக்கும் பொழுது இவர்கள் எதிரிகளை தோற்கடிக்கவும் வருகின்ற பிரச்சனைகளை சமாளிக்க கூடிய மன தைரியத்தையும் பெறுகிறார்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US