சூரியன் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கெல்லாம் பணமழை தானாம்
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவராக சூரிய பகவான் விளக்குகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறார். அதனால் இவருடைய ஒவ்வொரு மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அந்த வகையில் சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுதும் அவருடைய ராசி கட்டத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் மார்ச் 14ஆம் தேதி சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் ஏற்பட இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறார். அவர் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த இடம் மாற்றமானது இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. வெளிநாடு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் அரசு வழியே நல்ல ஆதாயமும் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இடமாற்றமானது இவர்களுக்கு புதிய வாகனம் மற்றும் ரியல் எஸ்டேட் செய்யக்கூடிய யோகம் உருவாகும். சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் மரியாதையையும் கௌரவத்தையும் நீங்கள் பெறுவீர்கள். உங்கள் வருமானத்தை விரிவடைவதற்கான மாற்றங்களை செய்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் இந்த மாற்றமானது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. பயணங்களின் பொழுது புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நிலை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |