2026: நவம்பர் 15 முதல் 21 வரை அதிரடி மாற்றங்கள்! விருச்சிகம் முதல் மீனம் வரை வார ராசிபலன்

By Sakthi Raj Nov 17, 2026 11:52 AM GMT
Report

 2026 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரை முக்கியமான கிரக மாற்றங்கள் நடக்கிறது. அப்படியாக, கார்த்திகை மாதத்தில் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தீர்ப்புமுனையும் மாற்றங்களும் காத்திருக்கிறது.

அந்த வகையில், விருச்சகம் முதல் மீனம் வரை அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ இருக்கிறது, பொருளாதாரத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று பல்வேறு விஷயங்களை ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.

2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு?

2026. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம்.. ராகு கேதுவால் ராஜயோகம் யாருக்கு?

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

விருச்சிகம்:

வேலை மற்றும் தொழில்: சூரிய பகவான் இந்த ராசிக்கு இந்த வாரத்தில் இடம் மாறுவது இவர்களுடைய முக்கியமான அம்சமாக இருக்கிறது. அதனால் ஜோதிட ரீதியாக இவர்களுக்கு தன்னம்பிக்கை தனிப்பட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது கவனம் வேண்டும் என்று கருதப்படுகிறது. புதிய தொழிலில் திட்டமிட்டு இறங்குவது அவசியம்.

பணவரவு:

பணவரவு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப தேவைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பம் மற்றும் காதல்:

குடும்பத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் தேவைகளை புரிந்து கொள்வீர்கள்.

ஆரோக்கியம்:

உடல் சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக தொடருங்கள்.

தனுசு:

வேலை மற்றும் தொழில்: உங்களுடைய திறமைகளை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர் ஆவணங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பணவரவு:

பண வரவு சீராக இருக்கும். உங்களுடைய சேமிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். பயணம் மற்றும் குடும்ப தேவைகளுக்காக பணம் செலவிடலாம்.

குடும்பம் மற்றும் காதல்:

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். காதல் உறவில் உங்களுடைய எதிர்காலம் பற்றி பேசுவதற்கான நிலை வரலாம்.

ஆரோக்கியம்:

பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். உணவு மற்றும் தூக்க விஷயங்களில் கவனமாக இருங்கள்.

மகரம்:

வேலை மற்றும் தொழில்:வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கலாம். தொழில் ரீதியாக பழைய திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளில் பாராட்டுகளை பெறுவீர்கள்.

பணவரவு:

நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முதலீடுகள் செய்யும் முன்பு உங்களுடைய பொருளாதாரத்தை சரி பார்த்துக் கொள்வது அவசியம். குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம்.

குடும்பம் மற்றும் காதல்:

குடும்பத்தில் முக்கியமான நபர்களுடைய ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் உறவுகளில் தேவையில்லாத சந்தேகங்களை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்:

உங்களின் வேலைப் பளுவால் உடல் சோர்வு வரலாம். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது அவசியமாகும். 

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

ஒருமுறை மனம் உடைந்துவிட்டால் அவ்வளவுதான்.. சமாதானம் ஆகாத 4 ராசிகள்..

2026: நவம்பர் 15 முதல் 21 வரை அதிரடி மாற்றங்கள்! விருச்சிகம் முதல் மீனம் வரை வார ராசிபலன் | Weekly Rasi Palan November 15 To 21 Prediction

கும்பம்:

வேலை மற்றும் தொழில்: புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் வழியாக உங்கள் வேலையில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் முக்கியமான விவாதங்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை பெறலாம். கூட்டாளிகளுடன் வெளிப்படையான ஒரு அணுகுமுறையை பின்பற்றுவீர்கள்.

பணவரவு:

வருமானத்தை உயர்த்துவதற்கான சில வழிகள் பெறுவீர்கள். எதிர்பாராத செலவுகளை சந்திக்கலாம். கடன் தொடர்பான விஷயங்களை கவனம் வேண்டும்.

குடும்பம் மற்றும் காதல்:

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். காதல் உறவில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது அவசியம்.

ஆரோக்கியம்:

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். நடை பயிற்சி உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மீனம்:

வேலை மற்றும் தொழில்: வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி சிக்கலான வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

பணவரவு:

பண வரவு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் வேண்டும். மருத்துவம் குடும்பம் அல்லது பயணம் தொடர்பாக சில செலவுகளை சந்திக்கலாம். கடன் வாங்குவதை தவிர்த்து வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்வது சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும்.

குடும்பம் மற்றும் காதல்:

குடும்பத்தில் உங்களுடைய ஆதரவு மற்றவருக்கு தேவைப்படலாம். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது அவசியம். காதல் உறவில் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

ஆரோக்கியம்:

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுங்கள். போதுமான தூக்கம் சரியான உணவு பழக்கங்களை மேற்கொள்வது அவசியம்.    

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US