ஜோதிடத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருக்கும் அரிய நிகழ்வு- யோகம் யாருக்கு
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் 12 கட்டங்களையும் அவர் அவர் கால நிலைகளுக்கு ஏற்ப சுற்றி வருவார்கள். அந்த வகையில் நவகிரகங்களில் சுப கிரகமாக இருக்கும் குரு பகவான் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த பெயற்சியானது ஜோதிடத்தில் கேந்திர திரிகோண யோகத்தை உருவாக்கும். ஆக, இந்த அற்புத பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மைகள் நடக்க இருக்கிறது என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் தொழில் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுத்து அவர்கள் வாழ்க்கையை அடுத்த கட்ட நகர்வை நோக்கி கூட்டி செல்ல கூடிய அற்புத காலமாக அமைய போகிறது. இவர்கள் இந்த நேரத்தில் வாழ்க்கையின் உண்மை நிலையை புரிந்து கொண்டு செயல் புரிவார்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகி மகிழ்ச்சி பெறவார்கள். மனதில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த வருத்தம் விலகும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் நிறைய புதிய வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது. சிலருக்கு வேலை தொடர்பாக சில இடமாற்றம் நடக்க வாய்ப்புகள் உள்ளது. பணம் தொடர்பான கஷ்டங்கள் எல்லாம் விலகி முன்னேற்ற பாதையை அடைய போகிறார்கள். பெற்றோர்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். லட்சுமி தேவியின் அருளால் இவர்களுக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும்.
தனுசு:
தனுசு: தனுசு ராசிக்கு மனதில் எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும். எதிர்காலம் பற்றிய முழுமையான பயம் விலகும். குழந்தைகளிடம் உங்களுடைய அன்பை முழுமையாக வெளிக்காட்டக்கூடிய அற்புதமான நாள். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாகவும் நன்மையாகவும் அமையும். பிள்ளைகள் தொடர்பாக சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி மகிழ்ச்சி பெறக்கூடிய அற்புதமான நாள். தொழில் ரீதியாக நால் மாற்றங்கள் நடக்கப்போகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







