குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த 2 ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
ஜோதிட கணக்குப்படி ஒவ்வொரு கிரகங்களுடைய மாறுதல்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை கொடுக்கிறது. அப்படியாக இந்த 2025 அக்டோபர் குருவின் வக்ர பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் பல ராசிகளுக்கு நன்மைகள் நடந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகளுக்கு மிகவும் மோசமான பலனை கொடுப்பதாக சொல்வார்கள்.
குருபகவான் அக்டோபர் 18ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு கடக ராசிக்கு நுழைய உள்ளா. கடகத்தில் நுழையும்குரு பகவான் டிசம்பர் 5ஆம் தேதி 3:38 மணி வரை அங்கே இருக்க உள்ளார். இந்த பெயர்ச்சியானது இரண்டு ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு குரு பகவானுடைய இந்த பெயர்ச்சியானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு மறைமுகமான தாக்கத்தை கொடுக்கப் போகிறார். இவர்கள் நட்புகள் வட்டாரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். நட்புகள் ரீதியாக சில சங்கடங்களையும் அவமானங்களையும் இவர்கள் சந்திக்ககூடும். சிலருக்கு தொழில் ரீதியாக சில இழப்புகள் உண்டாகும். வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அவர்கள் தள்ளி போடுவது நல்லது. வேலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியானது அவர்களுக்கு வாழ்க்கையில் ஆரோக்கிய குறைபாடுகளை கொடுக்கிறது. இவர்கள் வாழ்க்கை துணையுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொந்தங்களுடன் மிக கவனமாக உரையாடுவது அவசியமாகும். இவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லையால் நிறைய சங்கடங்களில் சந்திக்க நேரும். உணவு பழக்க வழக்கங்களில் இவர்கள் கட்டாயமாக மிக கவனமாக இல்லாவிடில் நிறைய ஆரோக்கிய குறைபாடுகளை இவர்கள் சந்திக்க கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







