தந்தேராஸ் 2025 : மறந்தும் இந்த 6 பொருட்களை மட்டும் வாங்காதீர்கள்

By Sakthi Raj Oct 15, 2025 04:11 AM GMT
Report

தந்தேராஸ் என்பது வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை துவக்க நாளாக கொண்டாடப்படக்கூடிய அற்புதமான நாள் ஆகும். இந்த ஆண்டு தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி அன்று வருகிறது. அதாவது இந்த நாளை அட்சய திருதியைக்கு இணையாக கருதி கொண்டாடப்படுகிறார்கள்.

இந்த நாளில் நாம் பொன் பொருள் வாங்கினால் அட்சய திருதியை விடவும் மிகச் சிறந்த பலனை நமக்கு அளிப்பதாக நம்புகிறார்கள். தந்தேராஸ் என்பது ஐப்பசி மாதம் தேய்பிறை  திரியோதசி திதியில் கொண்டாடப்படுவது தான் வழக்கம்.

இந்த நாளன்று நாம் மங்களகரமான செயல்கள் செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாளில் நாம் மகாலட்சுமி, குபேரர் மற்றும் ஆயுர்வேதத்தின் கடவுளாக போற்றப்படும் தன்வந்திரி ஆகியோரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகும்.

தந்தேராஸ் 2025 : மறந்தும் இந்த 6 பொருட்களை மட்டும் வாங்காதீர்கள் | Things We Shouldnt Buy On Dhanteras In Tamil

நம் வீடுகளில் இந்த நாளன்று தங்கம் வெள்ளி புதிய வாகனங்கள் சொத்துக்கள் ஆடைகள் போன்றவற்றை வாங்குவதால் நாம் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளர்ந்து இரட்டிப்பாகும் பலனை கொடுக்கும் என்கிறார்கள். இருந்தாலும் முக்கியமான சில ஆறு விஷயங்கள் நாம் மறந்தும் வாங்கக்கூடாது என்கிறார்கள். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.

1. தந்தேராஸ் நாளன்று கண்ணாடி பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி ராகுவுடன் தொடர்புடையதாகும். அதனால் முடிந்தவரை எந்த ஒரு கண்ணாடி பொருட்களையும் இந்த தினங்களில் வாங்குவதை தவிர்ப்பது எதிர்மறை ஆற்றல்களில் இருந்து நம்மை பாதுகாப்போம்.

2. தந்தேராஸ் நாளன்று நான் நெய் எண்ணெய் வாங்குவது தீமையான பலனாக சொல்லப்படுகிறது. இதை வாங்குவதால் நமக்கு பொருளாதார கஷ்டம் ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள். ஆதலால் நெய் எண்ணெய் வாங்க வேண்டும் என்றால் தந்தேராஸ் முந்தைய நாள் வாங்கிக் கொள்வது நன்மை அளிக்கும்.

வருகின்ற 29 ஆம் தேதி அன்று இந்த விளக்கேற்ற தவறாதீர்கள்

வருகின்ற 29 ஆம் தேதி அன்று இந்த விளக்கேற்ற தவறாதீர்கள்

3. தந்தேராஸ் நாளன்று நாம் கூர்மையான பொருட்கள் வாங்குவதையும் தவிர்த்து விட வேண்டும். அதாவது கத்தி ஊசி போன்ற எந்த ஒரு கூர்மையான பொருட்களையும் இந்த நாளில் வாங்காமல் தவிர்ப்பதால் நமக்கு வரக்கூடிய துரதிஷ்டத்தை தவிர்க்கலாம்.

4. அதே சமயம் தந்தேராஸ் கருப்பு நிற பொருட்கள் எதையும் வாங்காமல் இருப்பது நன்மை தரும். இவ்வாறு வாங்குவது நமக்கு மன கஷ்டங்களை கொடுத்து விடுமாம்.

5. இந்த புனிதமான நாளில் தோல் பொருட்கள் வாங்குவதையும் தவிர்த்து விட வேண்டும். இவை நமக்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடும்.

6. முடிந்தவரை இரும்பு தொடர்பான பொருட்களையும் வாங்குவதை தவிர்த்து விட வேண்டும். இதனால் சில தீய விளைவுகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US