நாளை (6-4-2025) ராமநவமி அன்று சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்
மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரம் ராம அவதாரம். இதில் ராமர் அவர் மனிதனாக பிறந்து மனிதர்கள் சந்திக்கும் அனைத்து இன்னல்களையும் சந்தித்து, அதை போராடி வென்று காட்டியவர்.
அதனால் ராமர் மனிதர்களின் வெற்றிக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறார். அப்படியாக, இவர் பூமியில் அவதரித்த தினத்தை தான் ராமநவமி என்று கொண்டாடுகின்றோம். இந்த 2025 ஆம் ஆண்டு ராம நவமி நாளை (6-4-2025) வருகிறது.
இந்த தினத்தில் நாம் ஸ்ரீ ராமரை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகி விடும். அதாவது, நீங்கள் ஒன்றை அடையவேண்டும் என்று லட்சியத்தோடு பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்த இலக்கை அடைய கட்டாயம் நீங்கள் ஸ்ரீ ராமரை சரண் அடையவேண்டும்.
நாம் இலக்கை அடைய போடும் முயற்சிகளுடன் ஸ்ரீ ராமரின் மந்திரங்கள் சொல்லி அவரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் வெகு விரைவில் நாம் அவரின் அருளால் வெற்றி அடைந்து விடலாம். அதோடு, நாளை ராமர் அவதரித்த தினத்தில் காலையில் எழுந்து குளித்து, ராமர் படம் வைத்திருந்தால் அதற்கு துளசி மாலை அணிவித்து, ராமருக்கு நீர்மோர் பானகம், நெய்வேதியமாக படைக்க வேண்டும்.
பிறகு விளக்கு ஏற்றி மனதார ராமரின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யவேண்டும்.
மந்திரம்:
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே
இந்த மந்திரத்தை நாம் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது எந்த ஒரு துன்பமும் நம்மை நெருங்காது. அதே போல் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்தில் தோல்வி என்பதே இருக்காது. நீங்கள் நினைத்த வாழ்க்கையும் வெற்றியும் உங்களை வந்து சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |