2025 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நேரம் எது?
நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டினை போற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும்.மேலும் நவராத்திரி இறுதி நாளில் கலைமகள் என்று போற்றி வழிபாடு செய்யப்படும் சரஸ்வதி தேவி அவர்களுக்கு கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை முக்கியமான நாள் ஆகும். அதாவது 2025 ஆம் ஆண்டு நவராத்திரி என்பது திங்கட்கிழமை செப்டம்பர் 22 அன்று துவங்கி மிக விமர்சையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல இடங்களில் இந்த நவராத்திரி விழாவை தசரா என்று பத்து நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையானது அக்டோபர் 2ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. அதில் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அன்று அதாவது நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை உலகமெங்கும் வாழும் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான வழிபாடு ஆகும்.
இந்த சரஸ்வதி பூஜை நாளில் செய்யும் தொழிலை தெய்வமாக வழிபாடு செய்து நாம் செய்யும் தொழிலுக்கு உரிய புத்தகங்களையும் கருவிகளையும் தேவியின் பாதங்களில் வைத்து வணங்கி வழிபாடு செய்வோம்.
அதாவது நாம் செய்யும் தொழில் இன்னும் மென்மேலும் வளர அம்பிகையின் அருளை பெறுவதற்காக நாம் அந்த நாள் முழுவதையும் நம்முடைய தொழில் வளர்ச்சிக்காக வழிபாடு செய்யக்கூடிய ஒரு முக்கிய நாளாகும்.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை அன்று வருகிறது. அன்று வழிபாடு செய்வதற்கு உகந்த நேரமாக காலை 9 மணிக்கும் மேல் மதியம் 12 மணிக்குள் இருப்பதால் இந்த நேரத்தில் பூஜை செய்வது சிறந்த பலனை கொடுக்கும். அதே போல் சரஸ்வதி பூஜை நாள் அன்றுதான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
அடுத்தபடியாக இறுதி நாளை விஜய தசமி நாளாக கொண்டாடுகின்றோம். அதாவது அம்பாள் இந்த நாளில் தான் வெற்றி வாகை சூடினாள். அந்த நாளை போற்றும் விதமாக விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் பெரும் அளவில் வெற்றியை பெறலாம் என்பது காலம் காலமாக நம்பிக்கையாக இருக்கிறது.
இந்த ஆண்டு விஜய தசமி அக்டோபர் 2 வியாழக்கிழமை அன்று வருகிறது. அதாவது நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாள் கொண்டாடப்படும் பண்டிகை தான் விஜயதசமி. இந்த நாள் நிறைவு நாளாகும் . அதாவது அசுரனை அழிக்க அனைத்து ஆயுதங்களுக்கும் பூஜை செய்யப்பட்டது.
அந்த ஆயுதங்கள் கொண்டு அம்பாள் தான் மக்களை தீய சக்தியிடம் இருந்து பாதுகாக்க அம்பிகையால் பயன்படுத்தப்பட்டு நம்மை காத்தருள செய்தது. ஆக விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை இவை அனைத்தும் நவராத்திரியின் மிக முக்கியமான விழாவாக இருப்பதால் இந்த பூஜைகளை தவறவிடாமல் நம்ம வீடுகளில் முறையாக வழிபாடு செய்தால் அம்பிகையின் முழு அருளையும் பெற்று நம் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ச்சிஅடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







