2026: குருபெயர்ச்சி: எந்த ராசியினருக்கு அதிர்ஷடம்.. யார் பரிகாரம் செய்யவேண்டும்?
ஜோதிடம் குரு பகவான் முக்கிய கிரகமாக இருக்கிறார். மேலும், ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் குருவின் அருள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
அப்படியாக, குரு பகவான் பராபவ வருஷம் வைகாசி மாதம் 12ஆம் தேதி ( 26- 5- 2026) செவ்வாய்க்கிழமை புனர்பூசம் நட்சத்திரம் 3-ம் பாதம் மிதுன ராசியில் இருந்து புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதம் குரு பகவான் கடக ராசிக்கு இடம் மாறுகிறார்.
இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷடமாகவும், சில ராசிகள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நிலையம் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
இந்த 2026 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமான பலனைக் கொடுக்க உள்ளது.
அப்படியாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசியாக மேஷம், சிம்மம், தனுசு, கும்பம் இருக்கிறார்கள். அர்ச்சனை செய்து கொள்ள வேண்டிய ராசியாக ரிஷபம், கடகம் துலாம், மகரம் ஆகிய ராசிகள் இருக்கிறார்கள்.

12 ராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்கள்:
மேஷம்:
குரு பகவான் இவர்களுக்கு நான்காம் இடம் சுப ஸ்தானத்தில் இருக்கிறார். அதனால் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் சுக போக வாழ்க்கை கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும்.
ரிஷபம்:
இவர்களுக்கு குரு பகவான் மூன்றாம் இடமான முன்னேற்ற ஸ்தானத்தில் இருக்கிறார். இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.பொருளாதார நிலையில் சிறந்த விளங்குவீர்கள்.
கடகம்:
இவர்களுக்கு ஒன்றாம் இடத்தில் ஜென்ம குரு இருக்கிறார். ஆகையால் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்தில் விரைய ஸ்தானத்தில் குரு இருக்கிறார். ஆக இவர்களுக்கு சுபச் செலவுகள் வரலாம். ஆன்மீகத்தை அதிக ஈடுபாடு உண்டாகும்.
கன்னி:
இவர்களுக்கு 11-ம் இடம் லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆக இவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
இவர்களுக்கு பத்தாம் இடமான தர்மஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆக தொழிலில் பதவி உயர்வு மற்றும் தொழில் மாற்றம் அல்லது பணிச்சுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு 9-ம் இடம் பாகிஸ்தானத்தில் குரு அமர்ந்திருக்கிறார். ஆக திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தந்தை வழியே சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
தனுசு:
இவர்களுக்கு எட்டாம் இடமான அட்டமஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆக திடீரென்று மறைமுக லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி தேடி வரும்.
மகரம்:
இவர்களுக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆக இவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்:
இவர்களுக்கு ஆறாம் இடத்தில் சற்று பகை ஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். ஆக கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எதிரிகளை அழிக்கக்கூடிய வலிமை கிடைக்கும்.
மீனம்:
இவர்களுக்கு குரு பகவான் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ஆக இவர்களுக்கு இந்த காலகட்டம் புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |