2026 வரலட்சுமி விரதம்: இந்த 3 ராசிகள் வீட்டு கதவை தட்ட போகும் அதிர்ஷ்ட மழை
இந்துமத விஷேச வழிபாடுகளில் வரலட்சுமி விரதமும் முக்கியமான ஒன்று. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடுகளில் செல்வச்செழிப்பு மற்றும் குடும்பத்தில் அமைதி, நல்ல ஆரோக்கியம் பெறலாம். இந்நிலையில் வரலட்சுமி விரதம் முன்னிட்டு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.
அவர்களுக்கு வாழ்க்கையில் சில நேர்மறை மாற்றங்கள் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
இவர்களுக்கு இந்த காலாட்டம் நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரம் விரிவு படுத்துவத்தைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்களுக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். விலகி சென்ற சொந்தங்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். பிரச்சனை நல்ல தீர்வைப் பெரும்.
சிம்மம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல ஏற்றத்தை பெறுவீர்கள். நீண்ட நாள் தடைபட்ட காரியம் நல்ல முடிவு பெரும். வங்கி தொடர்பாக சந்தித்த தாமதம் சரி ஆகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
தனுசு:
இவர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் உங்கள் வீடுகளில் நல்ல முடிவைப் பெரும். குடும்பத்துடன் ஆலய வழிபாட்டில் கலந்துக் கொள்வீர்கள். புதிய சொத்து சேர்க்கை உன்டு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |