2026: சந்திரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்

By Sakthi Raj Apr 20, 2026 02:00 PM GMT
Report

ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களில் நம்முடைய மனநிலையை மற்றும் நம்முடைய தாயை குறிக்கக்கூடிய கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். இவர் ஏப்ரல் 20ஆம் தேதி அவருடைய உச்சிய ராசியான ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

இவர் அங்கு ஏப்ரல் 21 ஆம் தேதி வரை இருக்கிறார். இருப்பினும் சந்திரனுடைய உச்ச ராசிக்கு செல்வதால் இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சந்திரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம் | 2026 April 20 Taurus Chandiran Peyarchi Prediction

2026: ஆரம்பமாகும் கேது பார்வை.. டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

2026: ஆரம்பமாகும் கேது பார்வை.. டிசம்பர் வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு வேலையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகப் போகிறது. மனநிலையில் தெளிவு பிறக்கும். பழைய கடன்களை அடைக்க கூடிய பாக்கியத்தை பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இடமாற்றமானது இவர்களுக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுபட வழிகளை கொடுக்க போகிறது. எடுத்த காரியங்களில் வெற்றியை பெறுவீர்கள். குடும்பத்தல் அமைதியும் பிள்ளைகளுக்காக சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள். சுற்றுலா பயணம் சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

பாம்பிற்கு நாக்கு ஏன் இரண்டாகப் பிளந்து இருக்கிறது? வியப்பூட்டும் புராணக்கதை

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இடமாற்றமானது இவர்களுக்கு எடுக்கக் கூடிய காரியங்களில் வெற்றியை கொடுக்கப் போகிறது. வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய காலகட்டம். திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US