இன்று வராக ஜெயந்தி: பூமி பிரச்சனை உள்ளவர்கள் இந்த தினத்தை தவறவிடாதீர்கள்

By Sakthi Raj Apr 07, 2026 04:36 AM GMT
Report

பெருமாளின் தசாவதாரம் நமக்கு முக்கியமான ஒன்றை உணர்த்துகிறது. அதாவது பக்தர்கள் எந்த நிலையில் துன்பத்தில் இருந்தாலும் அந்த துன்பத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு அந்த துன்பத்திற்கு தகுந்தாற்போல் அவதாரம் நான் எடுப்பேன் என்பதை பக்தர்களுக்காக பெருமாள் உணர்த்திருக்கிறார்.

அதாவது ஹிரண்யாட்சன் என்ற அரக்கனிடமிருந்து பூமியை மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து காத்தார். அந்த வகையில் பூமியை காப்பதற்காக சித்திரை மாதம் தேய்பிறை பஞ்சமியில் அவதாரம் எடுத்தார். அன்றுதான் வராக ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

அப்படியாக வராக ஜெயந்தி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? இந்த நாளினுடைய சிறப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம்.

இன்று வராக ஜெயந்தி: பூமி பிரச்சனை உள்ளவர்கள் இந்த தினத்தை தவறவிடாதீர்கள் | 2026 April 7 Varaha Jeyanti History And Worshiping

திருமண பொருத்தத்தின் பொழுது நாம் கட்டாயம் கவனிக்கவேண்டியவை

திருமண பொருத்தத்தின் பொழுது நாம் கட்டாயம் கவனிக்கவேண்டியவை

ஹிரண்யாட்சன் என்கின்ற அசுரன் கற்பனைக்கே எட்டாத பலவிதமான அட்டகாசங்களை செய்து வந்தான். தனிநபரில் துவங்கி தேவர் என எல்லோரையும் துன்புறுத்தி வந்த அவன் சலிப்படைந்து ஒருநாள் மொத்தமாக பூமியை பிரபஞ்சத்திலிருந்து பிடுங்கி கடலுக்குள் கொண்டு பதுக்கி வைத்துசந்தோஷம் அடைந்தான் வருணன், அக்னி, ஆதவன் போன்ற தெய்வங்கள் அவர்களுடைய அருளை பூமிக்கு பொழிய பூமியை தேடிய பொழுது அது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

யார் நல்லவனுக்காக நாம் சேவை செய்ய வேண்டுமோ அவர்களே இல்லாத பொழுது தம்முடைய பொறுப்புகளுக்காக தான் என்ன மரியாதை? என்று திகைத்துப் போனார்கள். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட முடியாத நிலையில் அவர்கள் மகாவிஷ்ணுவை நாடி சென்றனர்.

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம்

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம்

நடந்ததை மகாவிஷ்ணுவிடம் எடுத்துச் சொன்னார்கள். மகாவிஷ்ணு அவர்களை கருணையுடன் அணுகினார். அவர்களுடைய பொறுப்பின் மீது அவர்கள் காட்டும் அக்கரையை அவர் புரிந்து கொண்டார். மனிதர்கள் நிறைந்த பூமியே இல்லை என்றால் தேவர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

குறிப்பாக பிரம்மாவிற்கு அவருடைய படைப்புகளை வாழ செய்யும் ஒரு இடம் வேண்டும். அதுதான் பூமி. அங்கே ஐம்பூதங்களும் தம் பணியை மேற்கொண்டு மக்கள் நலனுக்காக வழிகாட்ட வேண்டுமே. பிறகு பூமி ஆழ் கடலில் சிறைப்பட்டு இருப்பதை அறிந்த மகாவிஷ்ணு அதை மீட்க புதியதொரு அவதாரம் எடுத்தார்.

அதுதான் வராக அவதாரம். அவர் வராக அவதாரம் எடுத்து கடலுக்குள் பாய்ந்தார். பூமிக்கு காவலாக இருந்த ஹிரண்யாட்சனைதன் வராக மூர்த்தி மூக்கு கொம்பால் குத்தி கிழித்து கொன்ற பிறகு பூமி உருண்டையை மூக்கு கொம்பு அடைப்புக்குள் நிறுத்தி மேலே கொண்டு வந்தார்.

இன்று வராக ஜெயந்தி: பூமி பிரச்சனை உள்ளவர்கள் இந்த தினத்தை தவறவிடாதீர்கள் | 2026 April 7 Varaha Jeyanti History And Worshiping

இறைவனிடம் மனிதன் கேட்ட 6 தர்மசங்கடமான கேள்விகள்.. என்ன தெரியுமா?

இறைவனிடம் மனிதன் கேட்ட 6 தர்மசங்கடமான கேள்விகள்.. என்ன தெரியுமா?

பூமி உட்பட அனைத்து உலகங்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து பூமியின் தேவியின் வேண்டுகோளின் படி அவர் பூவராகனாக ஸ்ரீமுஷ்ணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டார்.

மகாவிஷ்ணு பூமியை காப்பதற்காக அதாவது நம்மை காப்பதற்காக வராக அவதாரம் எடுத்த இந்த அற்புதமான நாளில் நாம் அதிகாலையில் நீராடி மகாவிஷ்ணு வராக அவதார படத்திற்கு முன்பாக அல்லது விக்கிரத்திற்கு துளசி மாலை அணிவித்து சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

பிறகு "ஓம் நமோ பகவதி வராஹரூபாய'' என்ற வராக கவச மந்திரம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். மகாவிஷ்ணுவுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் பால் தேன் மற்றும் பழங்களை படைக்கலாம். இதனால் ஏழைகளுக்கு உணவு அல்லது ஆடை தானம் செய்வது மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வீடு அல்லது பூமி தொடர்பான வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் வராக மூர்த்தி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் விலகும். அதே போல் இழந்த செல்வம் அல்லது சொத்துக்களை வராக மூர்த்தி வழிபாடு செய்தால் அவர்கள் மீட்டு எடுப்பார்கள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US