2026: ஒரே நேரத்தில் நடக்கும் கேது சனி சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜயோகம் பெரும் ராசிகள்
இந்துமத பண்டிகைகளில் அட்சய திருதியை மிகவும் முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. இந்த 2026 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி வர இருக்கிறது. இந்த மங்களகரமான நாளில் கேது சனி சுக்கிர பகவான் ஆகிய கிரகங்களின் பெயிற்சி நடைபெறுகிறது. இது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான பெயிற்சியாக பார்க்கப்படுகிறது.
அதாவது ஒரே நேரத்தில் மூன்று சக்தி வாய்ந்த கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது ஏப்ரல் 15ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நான்காம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
ஏப்ரல் 16ஆம் தேதி சுக்கிர பகவான் பரணி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி கிருத்திகை நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார், ஏப்ரல் 20 ஆம் தேதி கேது பகவான் சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதனால் ஒரே நேரத்தில் மூன்று கிரகங்களின் பெயர்ச்சி மிகப்பெரிய அளவில் நன்மை சேர்க்க போகிறது.
இதனால் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசியினர் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
சனி, கேது, சுக்கிர நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமான மாற்றத்தை கொடுக்கப் போகிறது. இந்த மாற்றம் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை மற்றும் கூடுதல் பொறுப்பையும் கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத முக்கிய பணிகளை இந்த காலகட்டங்களில் முடித்து விடுவீர்கள். கைகளுக்கு வராத பணத்தையும் நீங்கள் பெற்றுவிடுவீர்கள்.
கடகம்:
மூன்று கிரகங்களின் நட்சத்திர இடமாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளியே கொண்டு வரப் போகிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். திடீர் பொருளாதார உயர்வும், புதிய வேலை தொடர்பான வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களுடைய சேமிப்பு திட்டத்தை அதிகரிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்வீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்று நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு பொருளாதார நிலைமையை மேம்படுத்தப் போகிறது. தொழில் ரீதியாக சிறந்த வல்லுனர்களாக திகழப் போகிறீர்கள். புதிய தொழில் தொடர்பான ஒப்பந்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வருமானம் உயரும். ஆரோக்கிய தொடர்பாக இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |