குழந்தைகளின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கு செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஹோமம்

By Sakthi Raj Nov 22, 2026 04:46 AM GMT
Report

வழிபாடுகளில் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், டாக்டர் மகா தன்சேகர் ராஜா அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சக்தி வாய்ந்த மந்திரம் மற்றும் ஹோமத்தின் சிறப்புகள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

தேவ லோகத்தில் பயன்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களில் "ஹம்" என்கின்ற மந்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மந்திரத்தை எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் அவை வெற்றி பெறவும் நம்முடைய உடல் வலிமை மற்றும் மன வலிமை வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய பக்குவம் தைரியம் ஆக்கிவற்றை கொடுக்கக் கூடியதாக உள்ளது.

மேலும், இதனை ஒருவர் வாய்விட்டு தொடர்ந்து உச்சரிப்பதால் அவர்கள் உடலுக்கு புத்துணர்ச்சியும் நேர்மறை ஆற்றலும் பெருகுகிறது.

குழந்தைகளின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கு செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஹோமம் | Ayush Homam For Children Health And Life

2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன?

2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன?

ஹோமங்களின் முக்கியத்துவம்:

இந்து மத மரபில் "ஹோமம்" என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதுடன் வீடுகளில் நேரம் சரியில்லை, நேர்மறை ஆற்றல் சூழ்ந்து இருக்கிறது, ஜாதகத்தில் ஏதேனும் பிரச்சனை என்கின்ற பொழுது நாம் ஹோமம் செய்து அதனுடைய தீய தாக்கங்கள் குறையும் என்கின்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

அந்த வகையில், வீடுகளில் குழந்தைகளுடைய ஆரோக்கியத்திற்கும் அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கும் 12 வயது வரை ஆண்டுதோறும் வீடுகளில் ஆயுஷ் ஹோமம் செய்வது மிக சிறந்த நலன்களை கொடுக்கும்.

அதே போல், குழந்தைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அவர்கள் தங்களுடைய துறையில் சிறந்து விளங்குவதற்கும் நட்சத்திர ஹோமம் செய்வதும் சிறப்பு.

மேலும், மந்திரங்கள் மற்றும் ஹோமம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US