2026: கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை இதை செய்யாதீர்கள்

By Sakthi Raj Apr 06, 2026 04:36 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரக நகர்வுகள் தான் நம்முடைய வாழ்க்கையிலும் மாற்றங்களை நிகழ்த்துகிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முக்கிய கிரக மாற்றங்கள் நடக்கிறது. இதனால் சனி பகவானின் ஆதிக்கத்தை பெற்ற கும்ப ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை அவர்களுடைய பிள்ளைகள் வழியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் படிக்கட்டில் ஏறும் பொழுதும் குழந்தைகளுடன் விளையாடும் பொழுதும் மிகுந்த கவனத்துடன் அவர்களை பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

கும்ப ராசியினர் இந்த காலகட்டங்களில் குழந்தை பேறுக்காக மருத்துவமனைக்கு செல்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. அதே சமயம் இவர்கள் இந்த காலகட்டங்களில் எந்த ஒரு முதலீடுகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

நம்முடைய முற்பிறவி ரகசியங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

நம்முடைய முற்பிறவி ரகசியங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?

முக்கியமாக கணவன் மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் யாரேனும் கோபம் கொண்டாலும் ஒருவர் சகித்துக் கொண்டு கடந்து விட்டால் பிரிவுகளை தவிர்க்கலாம்.

இரண்டாவது திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய காலகட்டமாகும். இந்த காலகட்டங்களில் தவறான நட்புகளின் சகவாசம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படியாக கும்ப ராசிக்கு ஏப்ரல் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.

அதை பற்றி பார்ப்போம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US