2026: ஆகஸ்ட் மாதம் மேஷ ராசிக்கு எப்படி உள்ளது? எந்த விஷயங்களில் கவனம் வேண்டும்?

By Sakthi Raj Jul 16, 2026 04:39 AM GMT
Report

ஜோதிடத்தில் முதல் ராசியான மேஷ ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

சூரியனும் புதனும் சேர்வதால் இந்த மாதம் மேஷ ராசியினருக்கு மிகச்சிறப்பான மாதமாக அமைய போகிறது.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று வருத்தம் அடைபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும். வாரிசு மற்றும் சொத்து தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை பெறும். கடனுக்காக ஏதேனும் பொருட்களை அடமானம் வைத்திருந்தால் அதையெல்லாம் மீட்கக்கூடிய காலகட்டமாக அமையும்.

12 ராசிகளில் யாருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள் தெரியுமா?

12 ராசிகளில் யாருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள் தெரியுமா?

புதிய நிலம் அல்லது சொத்து சேர்க்கை வாங்குவதற்கான சூழ்நிலை கைக்கூடிவரும். இருப்பினும் சுக்கிர பகவான் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நீசம் அடைவதால் இவர்கள் பெரிய முதலீடுகள் மற்றும் வண்டி வாகனம் போன்ற காரியங்களுக்கு பெரிய அளவில் செலவழிப்பதை குறைத்துக் கொண்டால் நல்லது.

இந்த காலகட்டங்களில் முடிந்தவரை ஒருவரை நம்பி அவர்களுக்காக எந்த செயலிலும் இறங்க வேண்டாம். தினசரி இவர்கள் சூரிய வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் பணவரவு தடையில்லாமல் பெருகுவதற்கு லட்சுமி குபேர வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

இவர்கள் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சற்று அமைதி காத்து கவனத்துடன் செயல்படுவது அவசியம். மேலும், மேஷ ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.    


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US