2026: ஆகஸ்ட் 11 உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.. அதிர்ஷ்ட காற்று யாருக்கு?
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அன்று கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பால் அம்ச ராஜயோகம், சசி ஆதித்ய ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் என நான்கு சக்தி வாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றது.
இந்த காலகட்டம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எல்லா விஷயங்களிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியும் மிகப்பெரிய அளவில் லாபமும் கிடைக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
இவர்களுக்கு இந்த யோகம் மிகச்சிறந்த சாதகமான பலனை கொடுக்கப்போகிறது, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து காரியங்கள் இவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுகள் இவர்களை தேடி வரும். வேலை தொடர்பாக வெளிநாடு மற்றும் உள்நாடு பயணம் சென்று அதில் நல்ல லாபம் பெறக்கூடிய காலகட்டம்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நான்கு ராஜ யோகங்கள் மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கு மேல் அதிகாரிகளில் ஒத்துழைப்பால் மிகப்பெரிய அளவில் நற்பலன்களை பெறுவார்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடித்து சாதனை செய்யக்கூடிய காலகட்டம்.
துலாம்:
இவர்களுக்கு இந்த ராஜயோகம் மிகப்பெரிய அளவில் வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்ல போகிறது. இந்த காலகட்டங்களில் தொழில் செய்பவர்களுக்கு நிறைய லாப வாய்ப்புகளும் தொழில் முன்னேற்றத்தையும் கொடுக்கப்போகிறது, நீண்ட நாட்களாக முடங்கி கிடந்த திட்டங்கள் இவர்களுக்கு வேகமாக நிறைவேறும். புதிய வருமானம் பிறப்பதற்கான வழி உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |