ஆகஸ்ட் மாதம் கொண்டாடக்கூடிய முக்கியமான விசேஷம் மற்றும் விரத நாட்கள் என்ன
ஆகஸ்ட் மாதம் ஆங்கில நாட்காட்டியின் படி எட்டாவது மாதமாக உள்ளது. தமிழில் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் இணைந்து வரக்கூடியதாக இந்த ஆகஸ்ட் மாதம் உள்ளது.
இந்த மாதத்தில் நிறைய ஆன்மீக விழாக்கள், விசேஷங்கள், விரதங்கள் வர உள்ளது. இந்த மாதத்தில் தான் வரலட்சுமி விரதம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என வழிபாட்டிற்கு உரிய முக்கிய தினங்கள் வருகிறது.
அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் விசேஷ நாட்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

ஆகஸ்ட் 2026 விசேஷங்கள் :
ஆகஸ்ட் 03 ஆடி 18 திங்கள் ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட் 12 ஆடி 27 புதன் ஆடி அமாவாசை
ஆகஸ்ட் 14 ஆடி 29 வெள்ளி ஆடிப்பூரம்
ஆகஸ்ட் 15 ஆடி 30 சனி இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 ஆடி 31 ஞாயிறு நாக சதுர்த்தி
ஆகஸ்ட் 17 ஆடி 32 திங்கள் கருட பஞ்சமி,நாக பஞ்சமி
ஆகஸ்ட் 21 ஆவணி 04 வெள்ளி வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட் 26 ஆவணி 09 புதன் ஓணம் பண்டிகை
ஆகஸ்ட் 27 ஆவணி 10 வியாழன் ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட் 28 ஆவணி 11 வெள்ளி காயத்ரி ஜபம்
ஆகஸ்ட் 31 ஆவணி 14 திங்கள் மகா சங்கடஹர சதுர்த்தி
ஆகஸ்ட் 2026 விரத நாட்கள் :
அமாவாசை ஆகஸ்ட் 12 புதன் ஆடி 27
பெளர்ணமி ஆகஸ்ட் 27 வியாழன் ஆவணி 10
கிருத்திகை ஆகஸ்ட் 06 வியாழன் ஆடி 21
திருவோணம் ஆகஸ்ட் 26 புதன் ஆவணி 09
ஏகாதசி
ஆகஸ்ட் 09,ஞாயிறு, ஆடி 24,
ஆகஸ்ட் 23 ஞாயிறு ஆவணி 06
சஷ்டி
ஆகஸ்ட் 04, செவ்வாய், ஆடி 19,
ஆகஸ்ட் 18 செவ்வாய் ஆவணி 01
சிவராத்திரி ஆகஸ்ட் 11 செவ்வாய் ஆடி 26
பிரதோஷம்
ஆகஸ்ட் 10,திங்கள்,ஆடி 25,
ஆகஸ்ட் 25 செவ்வாய் ஆவணி 08
சதுர்த்தி ஆகஸ்ட் 16 ஞாயிறு ஆடி 31
ஆகஸ்ட் 2026 சுப முகூர்த்த நாட்கள் :
ஆகஸ்ட் 23 ஆவணி 06 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 30 ஆவணி 13 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 31 ஆவணி 14 திங்கள் தேய்பிறை முகூர்த்தம்
ஆகஸ்ட் 2026 வாஸ்து நாள், நல்ல நேரம்:
ஆகஸ்ட் 23 ஆவணி 06 ஞாயிறு காலை 07.23 முதல் காலை 07.59 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |