2026 நாளைய ராசிபலன்: 10 நவம்பர் 12 ராசிகளுக்கும் கிரக நிலைகள் எப்படி உள்ளது?
மேஷம்:
இவர்கள் புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான முயற்சிகள் கைக்கூடும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் வந்து மறையலாம். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காதல் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
அஸ்வினி:
முயற்சிகள் கைகூடிவரும்.
பரணி:
தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம்.
கிருத்திகை:
பொறுமை அவசியம்.
ரிஷபம்:
உறவினர்கள் உங்களுடைய குணங்களை தெரிந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆசை உண்டாகும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார். கலைத்துறையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கிருத்திகை:
முன்னேற்றம் நிறைந்த நாள்.
ரோகிணி:
பிரச்சனைகள் விலகும்.
மிருகசீரிஷம்:
புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம்:
இன்று உங்கள் கனிவான பேச்சுக்களால் சமுதாயத்தில் மதிப்பு உயரும். அரசு வழியே நல்ல அனுபவம் உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம்:
சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை:
முக்கியமான நபர்களின் ஒத்துழைப்பு பெறுவீர்கள்.
புனர்பூசம்:
ஆதரவான நாள்.

கடகம்:
முயற்சிகளில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்திற்கான இடமாற்றம் கைகூடும். அலுவலக பணிகளில் சில சூட்சுமங்களை தெரிந்து கொள்வீர்கள். புதிய கனவுகளும் ஆசைகளும் பிறக்கும்.
புனர்பூசம்:
வாழ்க்கையில் இருந்து தாமதம் விலகும்.
பூசம்:
ஊழியர்களின் ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம்:
சூட்சுமங்கனை தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்:
சக ஊழியர்களிடையே அனுசரித்து செல்வது அவசியம். புதிய விஷயங்களை நிதானதோடு கையாள்வது அவசியம். உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
மகம்:
அனுசரித்து செல்வது அவசியம்.
பூரம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
உத்திரம்:
குழப்பங்கள் விலகும்.
கன்னி:
முயற்சிகளுக்கு ஏற்ப வரவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். குடும்பத்தினருடைய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
உத்திரம்:
மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம்:
தேவையில்லாத போட்டிகள் விலகும்.
சித்திரை:
தேடல்கள் அதிகரிக்கும்.
துலாம்:
உங்களுடைய தொழிலில் நல்ல உயர்வு உண்டாகும். வாழ்க்கை துணையை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சினைகள் விலகும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
சித்திரை:
மேன்மையான நாள்.
சுவாதி:
பிரச்சனைகள் விலகும்.
விசாகம்:
நல்ல பண வரவு உண்டு.
விருச்சிகம்:
உறவினர்கள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் முற்றிலும் விலகும். பேச்சுக்கள் வழியாக புதிய வாய்ப்புகளை பெறுவீர்க. பார்வை தொடர்பான பிரச்சனை விலகும்.
விசாகம்:
ஒத்துழைப்பான நாள்.
அனுஷம்:
ஆதரவான நாள்.
கேட்டை:
பிரச்சனைகள் விலகும்.
தனுசு:
புதிய நபர்களால் அலைச்சல் ஏற்படலாம். நண்பர்களிடையே அனுசரித்து செல்வது அவசியம். தேவை இல்லாத விவாதங்களை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகள் வழியே ஒத்துழைப்பு கிடைக்கும்.
மூலம்:
அலைச்சல் உண்டாகும்.
பூராடம்:
ஏற்ற இறக்கமான நாள்.
உத்திராடம்:
மனக்குழப்பம் விலகும்.
மகரம்:
வேலை செய்யும் இடங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர பொருட்களை விரும்பி வாங்குவீர்கள். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சில பிரச்சனைகள் விலகும். சுப காரியங்களில் இருந்து மந்த நிலை விலகும்.
உத்திராடம்:
வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம்:
குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
அவிட்டம்:
மந்த நிலை விலகும்.
கும்பம்:
சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நினைத்தது போல் நடக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். வீடு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து கசப்புகள் விலகும். வேலை தொடர்பான புதிய சிந்தனை உருவாகும்.
அவிட்டம்:
எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சதயம்:
உதவிகளை பெறுவீர்கள்.
பூரட்டாதி:
புதுமையான நாள்.
மீனம்:
திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகள் பெறுவீர்கள். ஆன்மீக காரியங்களை ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் வந்து மறையும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கல்வி பணிகளில் சில மாற்றம் உண்டு.
பூரட்டாதி:
வெற்றியை வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி:
வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரேவதி:
மாற்றம் நிறைந்த நாள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |