அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி

By Sakthi Raj Nov 09, 2026 11:16 AM GMT
Report

மனிதர்களுடைய மனம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சிறிய பிரச்சனைக்கும் துவண்டு போவதும், சில நேரங்களில் முழுவதுமாக நம்பிக்கையை இழந்தும் என்று ஒரு மனம் பல்வேறு கட்டங்களில் வாழ்கிறது.

அப்படியாக, சில நேரங்களில் மனம் தேவையில்லாமல் அதிகப்படியான யோசனைக்குள் சிக்கிக்கொள்கிறது. அவை நம்முடைய உடல் நலத்தையும் மனதையும் பாதிப்பதோடு ஒரு போராட்டமான சூழலையும் உருவாக்குகிறது.

இவ்வாறான வேளையில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்ற பொழுது பகவத் கீதை பக்கங்களை புரட்டிப் பார்த்தால் நிச்சயம் நமக்கான பதில்கள் கிடைக்கிறது. அந்த வகையில். மனம் சோர்ந்து இருக்கின்ற பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதை பகவத்கீதை நமக்கு வழிகாட்டுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி | Bhagavad Gita Tips To Control Mind

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

பகவத் கீதை தத்துவங்கள்: இனிமையாக பேசும் எல்லோரும் நன்மை செய்வார்களா?

1. மனம் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்:

(பகவத் கீதை 6.5)

உத்தரேத் ஆத்மனாத்மநம்
நாத்மானம் அவசாதயேத் ஆத்மைவ
ஹை ஆத்மனோ பந்துர்
ஆத்மைவ ரிபுர் ஆத்மந:

பொருள்:

பல நேரங்களில் நமக்கு போராட்டம் என்பது நமக்கு வெளியில் நடப்பதில்லை. நமக்குள் நடக்கும் போராட்டம் தான் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கிறது. அதாவது மனமானது ஒரே நேரத்தில் பல விஷயங்களை பல மாதிரியாக சிந்திக்க முடியும். ஆதலால், ஒருவர் மனதை கொண்டு அவர்களை உயர்த்திக்கொள்ள வேண்டுமே தவிர அவர்களை எந்த நிலையிலும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.

ஆதலால், தான் மனிதனுடைய ஒரு மிகப்பெரிய நண்பனாகவும் எதிரியாகவும் மனம் இருக்க முடியும் என்று பகவத்கீதை நமக்கு எடுத்துரைக்கிறது. நீங்களே பல நேரங்களில் பார்த்திருக்கலாம்! மனம் ஒரு கட்டுப்பாட்டின்றி ஒரு யோசனைக்குள் நுழைகின்ற பொழுது அவை வேகமாக பல விஷயத்தை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும்.

அதிகப்படியான யோசனையால் மனக்குழப்பமா? பகவத் கீதை சொல்லும் எளிய வழி | Bhagavad Gita Tips To Control Mind

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

அந்த நொடியில் பயமும் பதட்டமும் நம்மை சூழ்ந்துவிடும். அதனை கட்டுப்படுத்த முடியாதது போல் தோன்றும். ஆனால் பகவான் கிருஷ்ணர் ஒருவர் விழிப்புணர்வுடனும் தொடர்ந்து ஒரு பயிற்சியில் ஈடுபடுகின்ற பொழுது மனதில் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார். இதனுடைய பொருள் நம்முடைய மனதில் தோன்றுகின்ற எண்ணங்களை வலுக்கட்டாயமாக நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை.

ஆனால், நமக்கு தோன்றுகின்ற எண்ணங்களை கவனமாக கவனிக்க வேண்டும். அவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பழக வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. அதாவது, மனம் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துகின்ற பொழுது அதில் நாம் மூழ்கி விடாமல் நிகழ்காலத்திற்கு மீண்டும் நம்முடைய கவனத்தை திருப்பிக் கொண்டு வர வேண்டும் என்கிறார்.

இது பயிற்சியினால் நிச்சயம் முடியும். மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு என்பதை அவனை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்க்கும். அதாவது, குழப்பங்களை ஏற்படுத்துகின்ற மனம் தான் பின்னர் தெளிவான சிந்தனைகளும் அறிவாற்றலையும் வழங்க கூடிய ஒரு வழிகாட்டியாகவும் நண்பனாகவும் மாறுகிறது.    

குறிப்பு:

இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US