2026: ஆகஸ்ட் மாதம் விபரீத ராஜயோகம் பெரும் விருச்சிக ராசியினர்

By Sakthi Raj Jul 24, 2026 04:53 AM GMT
Report

ஜோதிடத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை கொண்ட விருச்சிக ராசியினர் எப்பொழுதும் தனித்துவமாக இருப்பார்கள். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விருச்சிக ராசி எனக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இவர்களின் ராசிநாதன் எட்டாம் வீட்டில் மறைந்திருப்பதால் இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு கலவையான பலனை கொடுக்கப் போகிறார். இருப்பினும் புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு ஏற்ற காலமாக உள்ளது.

குரு பகவானுடைய பார்வை மற்றும் சனிபகவானுடைய வக்கிர நிலை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக கொடுக்கப் போகிறது. சுக்கிரன் இந்த காலகட்டங்களில் நீசம் அடைவதால் திருமணம் தொடர்பான முயற்சிகளை தற்காலிகமாக தள்ளி வைப்பது அவசியம்.

2026: ஆகஸ்ட் மாதம் அதிரடி திருப்பங்களை சந்திக்க போகும் துலாம் ராசியினர்..

2026: ஆகஸ்ட் மாதம் அதிரடி திருப்பங்களை சந்திக்க போகும் துலாம் ராசியினர்..

ஒன்பதாம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் இணைந்திருப்பது இவர்களுக்கு எதிர்ப்பாராத பொருளாதார லாபங்களை பெற்றுக் கொடுக்கப்போகிறது. விருச்சிக ராசி பெண்கள் இந்த காலகட்டங்களில் மிகவும் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் இருக்க போகிறார்கள்.

ஆனால், தோல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் கஞ்சனூர் அல்லது ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்களுக்கு சென்று நீங்கள் வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை கொடுக்கும்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி நாக சதுர்த்தி, கருட பஞ்சமி மற்றும் வரலட்சுமி விரதம் ஆகியவை இவர்கள் கடைபிடிப்பது மிகுந்த நற்பலன்களை கொடுக்கப் போகிறது. இருப்பினும் இவர்கள் ஆகஸ்ட் 6 மற்றும் 5 ஆம் தேதி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US