திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசித்தால் பாவங்கள் நீங்குமா?

By Sakthi Raj Nov 22, 2026 09:36 AM GMT
Report

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் முக்கியமான மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் காலை மாலை நேரங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், கார்த்திகை தீபத்திருநாள் முன்னிட்டு திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியாக, திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசன மகிமைகள் பற்றி பார்ப்போம்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படக்கூடிய கார்த்திகை தீபத்தை நேரில் தரிசிப்பவர்களுக்கு 21 தலைமுறை முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "ஓம் நமசிவாய" என்று பாராயணம் செய்கின்ற பொழுது அந்த மந்திரத்தை மூன்று கோடி முறை உச்சரித்த புண்ணிய பலன் நமக்கு கிடைக்கிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசித்தால் பாவங்கள் நீங்குமா? | Thiruvannamalai Karthigai Deepam Benefits

குழந்தைகளின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கு செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஹோமம்

குழந்தைகளின் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்திற்கு செய்யவேண்டிய சக்தி வாய்ந்த ஹோமம்

அதோடு, திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றுகின்ற பொழுது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கக்கூடிய ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உட்பட அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பொழுது "தீப மங்கள ஜோதி நமோ! நம" என்ற பாடலை பாடி வழிபாடு செய்தால் மங்களம் உண்டாகும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி வரக்கூடிய சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகை தைலங்களை சேர்த்து விடுவதாக சொல்கிறார்கள். இதனால் தீபத்திலிருந்து வெளிவரக்கூடிய புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசித்தால் பாவங்கள் நீங்குமா? | Thiruvannamalai Karthigai Deepam Benefits

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

கார்த்திகை தீபம் திருநாள் அன்று சிவலிங்கம் முன்பாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் பிரகாசமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு நிகராக இன்று அளவிலும் எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது.      

Disclaimer:

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US