2026: ஆகஸ்ட் மாதம் கட்டாயம் ரிஷப ராசியினருக்கு இது நடந்தே தீருமாம்
தமிழ் மாதங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிரகங்கள் அதனுடைய இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். ரிஷப ராசிக்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது.
இந்த காலகட்டம் இவர்களுக்கு பதவி உயர்வு, அங்கீகாரம், கௌரவம் ஆகியவை தேடி வரும். இவர்களுக்கு 11 குடைய சனி பகவான் வக்கிரம் பெற்று நற்பலன்களை கொடுக்கப் போகிறார்.
7 குடைய செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் வாழ்க்கை துணையால் அல்லது தொழில் கூட்டாளிகளால் நல்ல லாபம் உண்டாகும்.
மேலும், உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்சமாவதால் ஆரோக்கிய மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை சற்று கவனமாக இருக்க வேண்டும். தங்கம் சார்ந்த விஷயங்கள் மற்றும் பங்கு சந்தையில் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் இவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம். செவ்வாய் மற்றும் கிருத்திகை நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வதும் நன்மை தரும்.
இவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரக்கூடிய வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |