2026 கருட பஞ்சமி: காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த தினத்தை தவிர விடாதீர்கள்
ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை பஞ்சமி திதி கருட பஞ்சமி ஆகும். இது மகாவிஷ்ணுவின் வாகனமாக கருதக்கூடிய கருட பகவான் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாம் கருடாழ்வாரையும் மகாவிஷ்ணுவையும் விரதம் இருந்து வழிபாடு செய்ய நம்முடைய நாக தோஷங்கள் நம்முடைய முன் ஜென்ம வினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள தடைகள் அமைதியின்மை எல்லாம் விலகும். அப்படியாக, இந்த கருட பஞ்சமி தினத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை பற்றி பார்ப்போம்.

இந்த 2026 ஆம் ஆண்டு கருட பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காலையில் சுத்தமாக குளித்து வீட்டை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மகாவிஷ்ணு கருடனுடன் இருக்கக்கூடிய திரு உருவப் படத்திற்கு மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
பிறகு துளசி தீர்த்தம் காய்ச்சாத பசும்பால் மற்றும் எலுமிச்சை சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். இந்த நாளில் கருட மந்திரம் அல்லது கருட பகவானுடைய ஸ்லோகங்களை 27 முறை மனதார பாராயணம் செய்வது அவசியம்.

கருட பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு நாக தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் யாவும் விலகும். நீண்ட நாள் எதிரிகள் தொல்லை அல்லது தேவையில்லாத ஒருவரால் நெருக்கடிகள் ஏற்படுகிறது என்றால் அவை முற்றிலும் விலகும்.
நம்முடைய நினைவாற்றல் அதிகரிக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். கருட பகவானை தொடர்ந்து வழிபாடு செய்கின்ற பொழுது அவர் நம்முடைய குறைகளை பகவான் கிருஷ்ணரிடம் எடுத்து சொல்லி நமக்கு மிகப்பெரிய அளவில் ஆசிர்வாதத்தையும் அருளையும் பெற்றுக்கொடுப்பார்.
ஆக, ஜாதகத்தில் நாக தோஷம் கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கட்டாயம் கருடாழ்வார் பிறந்த தினத்தில் வழிபாடு செய்வதை தவறவிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |