2026: நீங்கள் மகர ராசியினரா? உங்களுக்கு ஜூன் மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj May 31, 2026 12:04 PM GMT
Report

ஜோதிடத்தில் சனி பகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினருக்கு ஜூன் மாதம் ஏழாம் இடத்தில் குரு மற்றும் சுக்கிர பகவான் இணைவதால் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். காதல் மற்றும் கணவன் மனைவி இடையே நல்ல புரிதலும் விட்டுக் கொடுக்க தன்மையும் உருவாகும்.

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும். இருப்பினும் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு புதன் ஆறாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மூச்சி பயிற்சி செய்வது அவசியம்.

இவர்கள் ஜூன் 18 ,19 ,20 மற்றும் 4,5,6 ஆகிய தேதிகளில் தேவையில்லாத வாக்குவாதம் வாக்குறுதிகள் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் இந்த காலகட்டங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.

2026: ஜூன் மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விரதம் மற்றும் விசேஷ நாட்கள்

2026: ஜூன் மாதத்தில் தவறவிடக்கூடாத முக்கியமான விரதம் மற்றும் விசேஷ நாட்கள்

சஷ்டி விரதம் மேற்கொள்வதும் திருச்செந்தூர் ஆலயம் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாக்கும். மேலும், நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று சிகிச்சை மூலமாக சிகிச்சை மேற்கொள்பவர்கள் பலமுறை யோசித்து செய்வது அவசியம்.

சொத்து மற்றும் சட்ட விவகாரங்களில் நீங்கள் சுயமாக முடிவெடுத்து செய்வதால் மட்டுமே நன்மை உண்டாகும். மேலும், ஜூன் மாதம் மகர ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்த தெரிந்து கொள்வோம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US