2026: சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்
ஜோதிடத்தில் சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷ ராசிக்கு இடம் மாறுவார். மேலும் சூரியன் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்கு வருகின்ற பொழுது அதனை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றோம்.
மேலும், சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷ ராசியில் உச்சமாக இருப்பார். அதோடு கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இதற்கு இணையாக பல்வேறு கோவில்களில் முக்கியமான நிகழ்வுகளும் விழாக்களும் நடைபெறுவதை நாம் காணலாம்.
அதிலும் குறிப்பாக மதுரையில் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதோடு இந்த சித்திரை மாதத்தில் தான் அட்சயதிருதியை போன்ற விசேஷமான நாட்களும் வருகிறது. அப்படியாக சித்திரை மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விரதம் மற்றும் விசேஷ நாட்கள் என்னவென்று பார்ப்போம்.

சித்திரை 2026 விசேஷங்கள் :
ஏப்ரல் 14 சித்திரை 01 செவ்வாய் தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 20 சித்திரை 07 திங்கள் அட்சய திரிதியை
ஏப்ரல் 21 சித்திரை 08 செவ்வாய் ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
ஏப்ரல் 26 சித்திரை 13 ஞாயிறு ஸ்ரீ வாசவி ஜெயந்தி
ஏப்ரல் 28 சித்திரை 15 செவ்வாய் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 30 சித்திரை 17 வியாழன் நரசிம்மர் ஜெயந்தி, கள்ளழகர் எதிர்சேவை
மே 01 சித்திரை 18 வெள்ளி தொழிலாளர் தினம், சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
மே 04 சித்திரை 21 திங்கள் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 11 சித்திரை 28 திங்கள் திருநாவுக்கரசர் குருபூஜை
சித்திரை 2026 விரத நாட்கள் :
அமாவாசை ஏப்ரல் 17 சித்திரை 04 வெள்ளி
பெளர்ணமி மே 01 சித்திரை 18 வெள்ளி
கிருத்திகை ஏப்ரல் 19 சித்திரை 06 ஞாயிறு
திருவோணம் மே 09 சித்திரை 26 சனி
ஏகாதசி
ஏப்ரல் 27, சித்திரை 14, திங்கள்,
மே 13, சித்திரை 30, புதன்
சஷ்டி
ஏப்ரல் 22, சித்திரை 09, புதன்
மே 07, சித்திரை 24, வியாழன்
சங்கடஹர சதுர்த்தி மே 05 சித்திரை 22 செவ்வாய்
சிவராத்திரி ஏப்ரல் 15 சித்திரை 02 புதன்
பிரதோஷம்
ஏப்ரல் 15, சித்திரை 02, புதன்
ஏப்ரல் 29, சித்திரை 16, புதன்
சதுர்த்தி ஏப்ரல் 20 சித்திரை 07 திங்கள்
சித்திரை 2026 சுப முகூர்த்த நாட்கள் :
ஏப்ரல் 16 சித்திரை 03 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 20 சித்திரை 07 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 23 சித்திரை 10 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
ஏப்ரல் 30 சித்திரை 17 வியாழன் வளர்பிறை முகூர்த்தம்
மே 08 சித்திரை 25 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம்
மே 13 சித்திரை 30 புதன் தேய்பிறை முகூர்த்தம்
மே 14 சித்திரை 31 வியாழன் தேய்பிறை முகூர்த்தம்
சித்திரை 2026 வாஸ்து நாள், நல்ல நேரம் :
ஏப்ரல் 23 சித்திரை 10 வியாழன் காலை 08.54 முதல் 09.30 வரை
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |