ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன?

By Sakthi Raj Nov 01, 2026 07:39 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனித்துவமாக செயல்பட கூடியவர்கள். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இவர்களிடத்தில் அதிகம் இருந்தாலும் சற்று பிடிவாத குணமும் நாம் அதிகம் பார்க்கலாம்.

அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசியாக எந்த நட்சத்திரம் இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். நாம் இப்பொழுது ரிஷப ராசியில் உள்ள மூன்று நட்சத்திரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான மற்றும் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களை பற்றி பார்ப்போம். 

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன? | Best Marriage Stars For Taurus Zodiac Sign

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

1. கிருத்திகை நட்சத்திரம்:

ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம், ஸ்வாதி மற்றும் சதயம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

அதோடு இவர்களுக்கு ஆயில்யம் மட்டும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் பலவீனமாக இருக்கிறார்கள். பழகும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

2. ரோகிணி நட்சத்திரம்:

ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிருகசீரிஷம், புனர்பூசம் விசாகம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் பலமாக இருக்கிறது.

இவர்கள் ஒன்று சேரும்பொழுது நல்ல பண வரவும் சொத்து சேர்க்கையும் கிடைக்கும். அதுவே பலவீனம் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது இவர்களுக்கு அஸ்வினி மற்றும் மூல நட்சத்திரக்காரர்கள் பிரச்சினையாக இருக்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருத்தமான திருமண நட்சத்திரங்கள் என்ன? | Best Marriage Stars For Taurus Zodiac Sign

2026: கேதார கௌரி விரதம் எப்பொழுது? பெண்கள் விரதத்தை கடைபிடிக்கும் முறை என்ன?

2026: கேதார கௌரி விரதம் எப்பொழுது? பெண்கள் விரதத்தை கடைபிடிக்கும் முறை என்ன?

3. மிருகசீரிஷம் நட்சத்திரம்:

ரிஷப ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை, பூசம் சுவாதி, அனுஷம், சதயம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்கள் பலமாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு பரணி மற்றும் பூரம் நட்சத்திரம் பலவீனமாக இருக்கிறது. மேலும், ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திர பொருத்தம் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US