சித்தர்கள் சொல்லும் வாஸ்து ரகசியம்? வீடுகளை இடிக்காமலும் மாற்றலாம்..

By Sakthi Raj Nov 01, 2026 04:55 AM GMT
Report

வாஸ்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வாஸ்து சரி இல்லை என்றால் நிச்சயமாக அந்த இடத்தில் ஒரு நபரை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க விடுவதில்லை.

அந்த வகையில், டாக்டர். மகா தன் சேகர் ராஜா அவர்கள் வாஸ்துரீதியாக வீட்டை மாற்ற வேண்டுமென்றால் அதை இடிக்கவும் உடைக்கவும் தேவையில்லை என்றும் சித்தர்கள் சொல்லி இருக்க கூடிய ரகசிய பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

பொதுவாக, வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அந்த இடங்களில் சுவர்கள் இடிப்பதற்கு பதிலாக அந்த இடத்தில் செம்பு பொருத்துவதன் வழியாக அதனுடைய ஆற்றலை நாம் சமநிலைப்படுத்தலாம் என்று சொல்கிறார்.

சித்தர்கள் சொல்லும் வாஸ்து ரகசியம்? வீடுகளை இடிக்காமலும் மாற்றலாம்.. | Siddhar Vastu Secrets Without Demolition

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

ஜாதகத்தில் யாருக்கு அழியாத புகழும் நிலையான வருமானமும் இருக்கும் தெரியுமா?

அதைப்போல், வீட்டை சுற்றி வெற்றிலை செடிகளை வளர்ப்பதும் ஒரு நல்ல பாதுகாப்பாக அமைகிறது. இவை நமக்கு வீடுகளில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷங்களையும் குறைக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

முக்கியமாக வெற்றிலை செடியை வீடுகளில் நான்கு மூலைகளிலும் வளர்ப்பது என்பது மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல், ஒரு வீடு சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். வீடுகளில் அரளி மற்றும் நாகலிங்கப்பூ போன்ற தாவரங்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இவை கோவில் போன்ற இடங்களில் மட்டுமே வளர்ப்பதற்கு உரியதாக இருக்கிறது. அதோடு, வாழை மரத்தின் உடைய ரகசியங்கள் அதனுடைய பயன்களை பற்றியும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அப்படியாக, வாஸ்துரீதியாக சித்தர்கள் சொல்லிருக்க கூடிய ரகசியம் என்னவென்று பல்வேறு விஷயங்களை நாம் மேலும் இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.   


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US