2026: கேதார கௌரி விரதம் எப்பொழுது? பெண்கள் விரதத்தை கடைபிடிக்கும் முறை என்ன?
இந்து மரபில் நிறைய விரதங்கள் இருந்து நாம் வழிபாடு செய்வது வழக்கம். ஒவ்வொரு விரதத்திற்கு பின்னாலும் வெவ்வேறு சிறப்பு நற்பலன்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான விரதமாக கேதார கௌரி விரதம் பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இது பெண்கள் கடைபிடிக்க கூடிய விரதங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த விரதம் பெண்கள் இருக்கும் பொழுது கணவன் நீண்ட ஆயுள், குடும்ப நலன், சுமங்கலி பாக்கியம் ஆகியவை பெற முடிகிறது. அதாவது, புராணத்தின் அடிப்படையில் பார்வதி தேவி சிவபெருமானுடைய உடலில் பாதியை பெற வேண்டும் என்று கேதாரத்தில் தவம் செய்திருக்கிறார்.

பார்வதி தேவி 21 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்து மகிழ்வித்தார். அதனுடைய பலனாக சிவபெருமான் அவருடைய உடலில் இடது பாதையை பார்வதி தேவிக்கு கொடுத்து அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
அதனால் இதற்கு கேதார கௌரி விரதம் என்ற பெயர் வந்தது. இந்த விரதம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி தசமி துவங்கி ஐப்பசி மாத அமாவாசை அதாவது தீபாவளி அன்று நிறைவு பெறுகிறது. இந்த விரதத்தில் கடைசி நாள் தான் மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது.
21 நாட்கள் இந்த விரதம் இருக்கின்ற பொழுது தினமும் வீடுகளை சுத்தமாக வைத்து காலையில் எழுந்து குளித்து அம்மனை வழிபட வேண்டும்.
21 என்ற எண்ணிக்கையில் 21 வாழை கொண்ட நோன்பு கயிறு 21 அதிரசம், 21 வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்வார்கள். தீபாவளி அன்று இரவு கேதாரீஸ்வரர் மற்றும் கௌரி தேவியை வைத்து பூஜை செய்து கணவருடைய கையால் நோன்பு கயிறு கட்டிக் கொள்வார்கள்.

இதில் 21 முறை நோன்பு கதையை கேட்பது இன்னும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விரதத்தை உண்மையான பக்தி கொண்டு கடைபிடிப்பவர்களுக்கு திருமணத்தில் உள்ள தடைகள் விலகும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்.
திருமணம் ஆன பெண்களுக்கு அவர்களுடைய கணவன் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் செல்வாக்குடனும் குடும்ப ஒற்றுமையுடன் வாழ்வார்கள். இந்த கேதார கௌரி விரதம் அக்டோபர் 20-ல் துவங்கி தீபாவளி அமாவாசை நாளான நவம்பர் 8, 2026 அன்று நிறைவடைந்தது.
21 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் நிச்சயம் இந்த கடைசி நிறைவு நாளான தீபாவளி பண்டிகை அன்று இந்த விரதம் இருந்து வழிபாடு செய்தால் கட்டாயமாக நற்பலன்களை பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |