2026: தீபாவளி முன்பு ஜொலிக்க போகும் அந்த 3 ராசிகள் யார்?
2026 ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக தன்தேரஸ் கொண்டாடப்பட்டது. மேலும், அந்த நாளில் மற்றொரு முக்கிய கிரகம் மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.
ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி, செல்வம், காதல், செழிப்பு ஆகியவற்றை குறிக்கக்கூடிய கிரகமாக சுக்கிரன் இருக்கிறார். இவர் நவம்பர் 6ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு வக்கிர பெயர்ச்சி அடைந்து உள்ளார்.
இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் செழிப்பான காலகட்டமாக இருக்கப்போகிறது. இவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறப்போகிறார்கள்.
தேவைக்கேற்ப பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது. நீண்ட நாட்களாக திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதோடு குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியான காலகட்டமாக மாறப்போகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சமுதாயத்தில் ஒரு சிறந்த அங்கீகாரமும் மதிக்கும் கிடைக்கும். குடும்பங்களில் ஏற்பட்ட விரிசல் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் புரிதலும் உண்டாகும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
குறிப்பாக அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குடும்பத்திலும் வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |