2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள்

By Sakthi Raj Feb 13, 2026 10:07 AM GMT
Report

ஜோதிடத்தில் லட்சுமி நாராயண யோகம் எனப்படுவது மிகவும் அரிதான யோகமாக பார்க்கப்படுகிறது. இந்த யோகம் ஒருவருக்கு மகிழ்ச்சி மற்றும் வீடுகளில் மங்களகரமான சூழ்நிலையை ஏற்படுகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை இந்த சுப யோகத்துடன் சூரியன் மற்றும் சந்திரன் பெயர்ச்சியால் உண்டாகும் சாம யோகம் உபயச்சாரி யோகம் மற்றும் புதாத்திய யோகத்தின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தனித்துவமான பலன்களை கொண்டுவரப் போகிறது.

இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகப்பெரிய அளவில் வாழ்கையில் திர்ஷ்டத்தை பெற போகிறார்கள். அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.

2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள் | 2026 Feb 13 Lakshmi Narayana Yogam Prediction

இந்த 3 ராசியினர் காதலராக கிடைத்தால் கொடுத்து வைத்தவர்களாம்.. யார் தெரியுமா?

இந்த 3 ராசியினர் காதலராக கிடைத்தால் கொடுத்து வைத்தவர்களாம்.. யார் தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்கள் வேலையில் சிறந்து விளங்க போகிறார்கள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும். வருமானத்தை உயர்த்துவதற்கான வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சமுதாயத்தில் முக்கிய நபரின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

கடகம்:

கடக ராசியினருக்கு இந்த காலகட்டமானது மனதில் ஒரு நேர்மறையான சிந்தனை வர போகிறது. நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபட போகிறார்கள். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அது மட்டுமல்லாமல் பூர்விக சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுகளும் அங்கீகாரமும் பெறக்கூடிய காலகட்டமாகும்.

உங்கள் ஜாதகத்தில் சிவபெருமான் அருள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் ஜாதகத்தில் சிவபெருமான் அருள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

தனுசு:

தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்களுக்கு வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீண்ட நாட்கள் கடன் பிரச்சனையில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனை விலகும். உடன் பிறந்தவர்களால் நல்ல ஆதாயமும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களை நம்பி சில முக்கியமான பொறுப்புகளை கொடுப்பார்கள். சேமிப்பு திட்டத்தை தொடங்குவீர்கள். வாழ்க்கை துணை வழியாக உங்களுக்கு வெற்றியும் சமுதாயத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US