2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

By Sakthi Raj Feb 09, 2026 08:36 AM GMT
Report

ஜோதிடத்தில் சூரியபகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் சூரியன் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி சூரிய பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியாகிறார். மார்ச் 15 வரை அவர் கும்ப ராசியில் இருக்கிறார். இந்த காலகட்டம் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை சேர்க்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம் | 2026 Feb 13 Suriyan Peyarchi Astrology Prediction

2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்

2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்

மேஷம்:

மேஷ ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த இடமாற்றமானது அவர்களுக்கு மனரீதியாக ஒரு தைரியத்தை கொடுக்கப் போகிறது. வருகின்ற பிரச்சனையை எளிதாக சமாளித்து விடலாம் என்கின்ற ஒரு நம்பிக்கை பிறக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் இவர்களை தேடி வரப்போகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த மாற்றமானது மனதில் ஒரு வகையான துணிச்சலை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட போகிறீர்கள். வழக்கு விஷயங்கள் இவர்களுக்கு சாதகமாகவே அமையும். தந்தை வழியே உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.

இந்த தீர்த்தங்களில் நீராடினால் எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகுமாம்.. எங்கு தெரியுமா?

இந்த தீர்த்தங்களில் நீராடினால் எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகுமாம்.. எங்கு தெரியுமா?

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு சூரிய பகவானுடைய இந்த மாற்றமானது தந்தை உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனையை சரி செய்ய போகிறது. உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இந்த காலகட்டத்தில் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நினைத்த இடத்தில் இருந்து வருமானம் வந்து சேரும்.

தனுசு:

தனுசு ராசியினருக்கு பூர்விக இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகப் போகிறது. தந்தை வழி உறவுகளால் இருந்து வந்த சங்கடம் விலகும். எதிர்காலம் பற்றிய கவலை விலகி முன்னேற்ற பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US