2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள்

By Sakthi Raj Feb 08, 2026 10:00 AM GMT
Report

ஜோதிடத்தில் சந்திர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். சந்திரன் தான் நம்முடைய தாய் மற்றும் நம்முடைய மனநிலையை குறிக்கக்கூடிய கிரகமாக உள்ளார். ஜாதகத்தில் சந்திரன் நிலை சரியாக இருந்தால் மிகவும் புத்திசாலியாக அந்த நபர் இருப்பார். மேலும் சந்திரன் ஒவ்வொரு காலகட்டங்களில் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி இரவு 1.11 மணிக்கு சந்திரன் துலாம் ராசியில் இருந்து விலகி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சந்திரனின் இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மன கசப்புகளை கொடுக்கப்போகிறது. அந்த ராசிகள் யார் என்பதை பார்ப்போம்.

2026 சந்திரன் பெயர்ச்சி: மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய முக்கியமான ராசிகள் | 2026 Feb10 Santhiran Peyarchi Prediction

இந்த 3 ராசிகளுக்கு காதல் வாழ்க்கையே செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?

இந்த 3 ராசிகளுக்கு காதல் வாழ்க்கையே செட் ஆகாதாம்.. யார் தெரியுமா?

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டமானது அவர்களுக்கு மனரீதியாக நிறைய குழப்பங்களை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். மனப்பதட்டம் தேவை இல்லாத கோபங்கள் வரக்கூடும். பொருளாதார ரீதியாக இவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். தவறான எந்த முடிவுகளையும் இந்த காலகட்டத்தில் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டமானது அவர்களுக்கு எதிரிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேலை ரீதியாக ஒரு சில குழப்பங்களும் தடைகளும் சந்திப்பீர்கள். அரசியல் தொடர்பாக நிறைய பிரச்சனைகளை சந்திக்க கூடும். சளி காய்ச்சல் போன்ற உடல் ரீதியான தொந்தரவுகள் சந்திப்பீர்கள். திடீர் செலவுகள் வரலாம். தாய் உடல் நிலையில் கவனம் வேண்டும்.

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

கருப்பு நிற ஆடையை இந்த நேரங்களில் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்

தனுசு:

தனுசு ராசியினருக்கு இந்த காலகட்டமானது அவர்களுக்கு வேலை பளு அதிகரிக்க போகிறது. வீடுகளில் எதிர்பாராத மன குழப்பங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளால் பண சேமிப்புகள் கரையலாம். பயணத்தின் பொழுது உங்களுடைய பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். பிறரிடம் இந்த காலகட்டங்களில் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்த்து விடுங்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US