2026: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம்.. 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

Report

 சிம்ம ராசியில் ஏற்கனவே குரு கேது இருக்கின்ற நேரத்தில் வருகின்ற 30ஆம் தேதி அன்று சந்திரனும் அந்த ராசியில் பெயர்ச்சியாகிறார். மேலும், சந்திரன் குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாக இருக்கிறது.

இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றம் காத்திருக்கிறது. அதாவது சந்திரன் ஜோதிட ரீதியாக இரண்டரை நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் தங்குவார். பிறகு அவர் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிடுவார்.

அந்த வகையில், நவம்பர் 30ஆம் தேதி அன்று சிம்ம ராசிக்கு வரும் சந்திரன் டிசம்பர் இரண்டாம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை கஜகேசரி ராஜயோகம் இருக்கிறது.

இந்த யோகம் ஒருவர் வாழ்க்கையில் திடீர் மகிழ்ச்சி, மரியாதை, அறிவாற்றல், பொருளாதாரம் முன்னேற்றம் ஆகியவற்றை கொடுக்கக் கூடியதாக அமைகிறது. இதனால் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் நல்ல பலன்களை பெற போகிறார்கள் என்று பார்ப்போம்.

2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன?

2026: 18 மாதம் பிறகு நிகழும் ராகு கேது பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு வரவிருக்கும் நற்செய்திகள் என்ன?

2026: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம்.. 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம் | 2026 Gajakesari Rajayogam Bring Luck To 3 Zodiac

கடகம்:

கஜகேசரி ராஜயோகம் என்பது கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலையில் நல்ல முடிவை கொடுக்கப்போகிறது. அதிர்ஷ்ட காற்று இவர்கள் பக்கம் வீசப்போகிறது. இவர்களுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கப் போகிறது. வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். கடின உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். பொருளாதாரம் இவர்களுக்கு சிறப்பாக அமையும். காதல் வாழ்க்கையில் இனிமை உண்டாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைகூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணி உயர்வு போனஸ் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகளை தேடி கொடுக்க போகிறது. வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். வணிகர்களுக்கு புதிய தொடர்புகள் உருவாகும். நல்ல லாபமும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கக்கூடிய காலகட்டம். ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தலைமைத்துவ பண்பால் நற்பெயரை பெறப்போகிறீர்கள். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்துவார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆன்மிக ஈடுபாடு உருவாகும்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US