இந்த மந்திரங்களை பாராயணம் செய்தால் வீடுகளில் பிரச்சினை வருமா?
ஆன்மீகத்தில் மந்திரம் சொல்லி வழிபாடு செய்வதற்கு எப்பொழுதுமே ஒரு தனி பலன் உண்டு. அப்படியாக, மிகவும் சக்தி வாய்ந்த லலிதா சகஸ்ரநாமம் ஒருவர் பாராயணம் செய்கின்ற பொழுதோ அல்லது அந்த மந்திரங்களை கேட்கும் பொழுது அது நபர்களுக்கு அளவில்லாத நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில், லலிதா சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வதன் வழியாக நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி நம்மோடு விரிவாக பகிர்ந்து கொள்கிறார் ஜோதிடர் பத்மப்ரியா அவர்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, லலித்ரா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம் என்று ஒரு சில தவறான கருத்துக்கள் பரவி வருகிறது என்று சொல்வதை மறுக்கிறார்.

அதாவது இது தெய்வத்தால் வழங்கப்பட்ட ஒரு பொக்கிஷம் என்றும் இது நம்மை பாதுகாப்பதற்கானது என்றும் அவர் சொல்கிறார்.
மேலும், லலிதா சகஸ்ரநாமம் தொடர்ந்து ஒருவர் பாராயணம் செய்து வருகின்ற பொழுது அவர்களுக்கு அம்பிக்கையின் முழு அருளும் அம்பிகை அவர்களிடம் ஒரு தாயாக இருந்து வழிகாட்டி உதவுவார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்க இருக்கக்கூடிய லலிதா சகஸ்ரநாமம் வகுப்பில் அடுத்த கட்டங்களை பற்றியும் இவர் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதைப்பற்றி இந்த காணொளியில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.